பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : மனப்பான்மை

735

எல்லாருமே உபதேசம் பண்ணுறதிலேயே கவனமாயிருந்திட்டதுதான். அமெரிக்காவுக்குப் போனா என்ன? ஐரோப்பாவுக்குப் போனா என்ன? இந்திய முதலாளித்துவ மனப்பான்மையிங்கறது, ஒரே மாதிரித்தான் இருக்குது. 'தான் அனுபவிக்கிற செளகரியங்கள் தன்னிடம் ஊழியம் புரிய வருகிறவர்களுக்கு எட்டாததாக இருக்க வேண்டும்’ என்று நினைக்கிற மனப்பான்மை இந்த நாட்டு முதலாளிகளின் பிறப்புரிமை. அதை இன்னொரு நாட்டுப் பிரயாண அனுபவம் கூட மாற்றி விட முடியாதுதான்’ என்று நினைத்தபடியே, சர்வ சுதந்திரமாக நடந்து காம்பவுண்டுக்கு வெளியே போய்த் தன் காரை ஸ்டார்ட் செய்து, சகோதரர்களின் ஒர்க் ஷாப்புக்குச் சென்று அவர்களோடு சேர்ந்து பகலுணவை முடித்துக் கொண்டு திரும்பவும் அமராவதி ஆட்டோமொபைல்ஸ் வாசலுக்கு வந்து ஞாபகமாகக் காரைக் காம்பவுண்டுக்கு வெளியிலேயே விட்ட பின், மகா தீரனாக நடந்தபடி உள்ளே போனான்.

ஆமாம்! அவனால் இதற்கெல்லாம் கவலைப்படமுடியாது! ஏனென்றால் நாளைய உலகம் அவனுடையதுதான்! இனி நாளைய வெற்றியும் அவனுடையதுதான்.

(தாமரை, டிசம்பர், 1964)