பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

740

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கொள்ள கலா வருகிறாளாம்.ஆம், இன்று நல்ல நாளாம். இரவு நெருங்க நெருங்க என் உள்ளம் படபடத்தது! இன்னும் சிறிது நேரத்திற்குள் அப்படியே அணைத்து…

சட்டென்று என் தூக்கம் கலைந்தது. நடு நிசி! ஆம் இதுவரை நான் கண்டதெல்லாம் கனவுதான்! இதோ என் மனைவி லக்ஷ்மிதான் என் அருகிலேயே, சீ ,சீ! என்ன கெட்ட கனவு! தூரத்தில் கலாவும், என் குழந்தைகளும் வாயிற்படி அருகே படுத்து இருப்பது தெரிந்தது.

என் மனைவியின் சாந்த முகத்தில், நிறைந்த நெஞ்சிலிருந்த வழிந்த புன்னகை அந்த இருட்டிலும் தேங்கி நிற்பது தெரிந்தது. அவள் புரண்டு படுத்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள். என் நெஞ்சை என்னவோ செய்தது. என் உணர்ச்சி, வேகம், சுடு சொல், சிடுசிடுப்பு, அலுப்பு, வெகுளி, வெறுப்பு, கோபம், தாபம் இவை அவ்வளவையும் தாங்கிக் கொள்ள ‘நானிருக்கிறேன், நீங்கள் நிச்சிந்தையாக எதை வேண்டுமானாலும் ரசியுங்கள். ஆனால் என்னைப் பிடித்திருக்கும் பிடியை மட்டும் தளர விடாதீர்கள்.அந்த ஆதரவுதான் என் நெஞ்ச நிறைவுக்குக் காரணம்!’ என்று கையைப் பற்றிக் கொண்டதன் மூலம் இந்தப் பேதை உணர்த்துகிறாளோ? இவளை எக்காரணம் கொண்டும் கை விட மாட்டேன். இது சத்தியம்! பொங்கி எழுந்த என் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள, ‘இது சத்தியம்’ என்று வாய் முணுமுணுக்க, அவள் கைகளை இறுகப் பற்றினேன்.

{right|(காதல், ஏப்ரல், 1965)}