பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

744

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வந்துட்டா, அப்பாவோட பாத்ரூமைக் கழுவறதுக்காக மாடிக்குப் போனா. நான் அடுத்த ரூமிலே தூக்கம் கலைந்து முழிச்சிண்டே படுக்கையில் புரண்டுண்டிருந்தேன். ஒட்டச்சி ஏதோ தேளோ, பாம்போ பிடுங்கிட்ட மாதிரி கூப்பாடு போட்ட குரலைக் கேட்டு நான் எழுந்திருந்து ஓடிப் போய்ப் பார்த்தேன். பார்த்தா..? என்ன அநியாயம் இந்த ஒட்டச்சி வாஷ்பேசினைக் கழுவறதுக்காக அதுக்கிட்ட நிண்டிருந்தவளை எங்கப்பா ஆஸ்திகரத்தினம் தர்மசிந்தாமணி சம்பு சாஸ்திரிகள் - முந்தானையைப் பிடிச்சி இழுத்துப் பலத்காரமா என்னமோ பண்ணிண்டிருந்தார். அதைப் பார்த்திண்டு அங்கே இன்னமும் நிற்கிறது பாவம்னு நேக்கு தோணித்து. இதை இப்படியே அம்மா கிட்ட ஓடிப் போய்ச் சொன்னா என்னன்னு தோணித்து. அம்மாவோட ‘பெட்ரூம்’ பக்கத்திலே தனியாயிருந்தது. பத்து நிமிஷத்துக்கு மின்னாலேதான் சமையற்காரர், அம்மா பெட்ருமுக்குக் காபி எடுத்திண்டு போனதைப் பார்த்தேன். அதிலேருந்து அம்மா எந்திருந்தாச்சுனு தெரிஞ்சுது. ஓடினேன். அம்மா பெட்ரூம் கதவு சாத்தி உள் பக்கமாத் தாழ் போட்டிருந்தது. இப்பத்தானே சமையற்காரர் காபி எடுத்திண்டு வந்தார். அதுக்குள்ளே காபியைக் கொடுத்திட்டு அவர் எப்படித் திரும்பியிருக்க முடியும்னு எனக்குச் சந்தேகமாயிருந்தது. அடைச்சிருந்த கதவின் நடுவே சாவித் துவாரத்து வழியா உள்ளே எட்டிப் பார்த்தேன். ஐயையோ...! எனக்கு ஒரே அசிங்கமாயிருந்தது. சமையற்காரரும், அம்மாவும். நினைக்கவே ஆபாசமாயிருந்தது. அங்கே அப்பா ஒட்டச்சியை கஷ்டப்படுத்திண்டிருந்த மாதிரி, இங்கே அம்மா சமையற்காரரைக் கஷ்டப்படுத்திண்டிருந்தாள். நான் எங்கேயாவது ஆத்துலே, குளத்துலே, குதிச்சுத் தற்கொலை பண்ணிக்கனும் போலத் தோணிடுத்து. எனக்கு என்ன இரசாபாசம்? உயர்ந்த சாதி, உயர்ந்த ஆசாரம், உயர்ந்த அனுஷ்டானம்னு ஊரை ஏமாத்திண்டு புருஷனுக்கு மனைவியாயிராத அம்மாவும், மனைவிக்குப் புருஷனாயிராத அப்பாவுமாக வாய்த்ததுக்காக நான்தான் தற்கொலை பண்ணிக்கணும். டிரைவர் கன்னையனிடம் அப்பாவும், அம்மாவும் ஏன் பயப்படறான்னு இப்பத்தான் தெரியறது. டிரைவர் கன்னையன் அடிக்கடி சொல்வானே, அதுக்கும் அர்த்தம் இப்பத்தான் புரியறது. அர்த்தம் என்னான்னு ரொம்ப நன்னாப் புரியறது இப்போ. “மானங் கெட்டுப் போனவன்லாம் டீக்கா டிரஸ் பண்ணிண்டு கார்லே போயிண்டிருப்பான். இங்கே உள்ளார எப்படி வாழறாங்கன்னு பார்த்துட்டா அப்புறம் ஊர் சிரிச்சிப்பிடும்” என்று அம்மா அவனைக் கோபித்துப் பேசிய ஒரு தினத்தில் வீட்டுக்குத் திரும்பும் போது, தனக்குத் தானே முனகிக் கொண்டு போனான் டிரைவர். அவன் அப்படி முனகிண்டு போனதை நானும் கேட்டேன். அதுக்கு என்ன அர்த்தம்னு அன்னிக்கு நேக்குப் புரியலே. ஆனா இன்னிக்குப் புரிஞ்ச மாதிரி இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. இந்த மாதிரி ஒரு விஷயத்தைப் பற்றித் தோட்டக்காரனும், டிரைவரும் ஒரு நாள் பேசிண்டிருந்தா. நானும் கூட உட்கார்ந்திருந்தேன். எனக்கு இதெல்லாம் புரியாது. நான் சித்த ஸ்வாதீனமில்லாத பிள்ளைன்னு நம்பி அவா ரெண்டுபேரும் ரொம்ப ஃப்ரீயா பேசிண்டா. அந்தப் பேச்சை முடிக்கிற போது டிரைவர் சொன்னான். ‘இன்னைக்கு இந்த மாதிரி ‘அரிஸ்டாக்ரடிக்’ ஃபேமிலியிலே இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணம் அண்ணே. பத்து இடம் பார்த்தா அதிலே