பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

750

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

போர்டுகள் நிரந்தரமாயின. அவற்றால் கடுமையும் அதிகமாயிற்று. இளம் மாணவிகள் என்ற நளின வாத்தியங்களின் நரம்புகளை வருடி, இனிய பண்களை வாசிக்கலாமென்று கனவு கண்ட மிஸ், சாவித்திரியின் எண்ணம் மீண்டும் வறண்டது.

போர்டுகள் மாட்டப்பட்ட நாலாம் நாள் இரவு மீண்டும் ஒரு மின்சாரத் கோளாறு காரணமாக விளக்குகள் போயின.

வார்டன் மிஸ், சாவித்திரி ஃபோன் செய்து விட்டு வராந்தாவுக்கு வந்தாள். வராந்தாவில் ஒரே மாணவிகள் கூட்டம். ஒருவரை ஒருவர் காண முடியாத இருள்.

“அத்தனை கருணை உள்ளவள் என்றால் ஏன் புதிதாக ரெண்டு போர்டை வேறு எழுதி வாங்கி மாட்டணுமாம்”

“பேச்செல்லாம் சுத்த வேஷம்…”

“நாமாக முந்திக் கொண்டோமோ தலைக்கு ஐந்து ரூபாய் ஃபைனோடு போயிற்றே? வார்டனே ரிப்போர்ட் செய்திருந்தால் டிஸ்மிஸ்ஸே ஆகியிருக்கும். நல்லவேளை. பளிச்சென்று விளக்கு வந்தது. மிஸ். சாவித்திரி எம்.ஏ நிற்பதை அவர்கள் பார்த்தார்கள். ஆனால்...? இப்போது ஒரு வித்யாசம்.

இன்று வார்டனைப் பார்த்த பின்னும் பேச்சு - சிரிப்பு - கேலி எதுவுமே நிற்கவில்லை. அதிலிருந்து தப்ப சாவித்திரிதான் தன் அறைக்கு விரைய வேண்டி யிருந்தது.அந்தக் கல்லூரி வேலையை இராஜிநாமா செய்து எழுதுவதற்கு முன் அவள் நொந்த மனதோடு தனக்குத்தானே இப்படிச் சொல்லிக் கொண்டாள்.

“இந்த இனிய வாத்தியங்களை நான் இனி என்றும் வாசிக்கவே முடியாதபடி இறுக்கிக் கட்டி விட்டார்கள் பாவம்.”

{right|(தாமரை - 1967க்கு முன்)}}