பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / கொள்ளைக்காரன் * 635 “இல்லை சார்! அவன் அங்கேதான் இருக்கிறான்.” “சரி, அப்படியானால் வாரும்போகலாம்'நான் நெல்லையப்பப் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு அவரோடு உடனே இலஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றேன். துர்மரணம் அடைந்த காவற்காரர்கள் மூன்று பேரையும் பரிசோதித்த டாக்டர் எனக்குப் பயன்படும்படியான விசேஷத் தகவல் எதனையும் கூறவில்லை. "பயம்" மிகுதியில் அதிர்ச்சியடைந்து மூச்சு நின்று இறந்திருக்கிறார்கள். இவர்கள் இரத்தம் கக்கி இறந்ததற்கு வைத்திய ரீதியாக எந்தக் காரணமும் தென்படவில்லை. அவர் கூறியதைக் குறித்துக் கொண்டு காவற்காரர்களின் பிரேதங்களை உரிய உறவினர்களிடம் ஒப்படைத்தேன். இறுதிக் கிரியைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது இரவு ஏழரை மணி இருக்கும். - “நெல்லையப்பப்பிள்ளை ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டைஎடுத்துக்கொள்ளும் உயிரோடு இருக்கும் கிழக்குப் பக்கத்துக் காவற்காரனையும் கூட்டிக் கொள்ளும். இப்போதே போய் உம்முடைய தோப்பையும் பார்வையிடவேண்டும்” என்றேன் நான். அவரும் சம்மதித்தார். காவற்காரன் பெட்ரோமாக்ஸ் லைட்டோடு வந்தான். மூவரும் தோப்புக்குச் சென்றோம். அமாவாசைக்கு மறுநாள் ஆயிற்று நல்ல இருட்டு.போகும்போதே காவற்காரனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவன் தோப்பிற்குள் நுழைவதற்கே நடுங்குகிறான் என்று தெரிந்தது. “என்னப்பா? தோப்பிலே படுத்துத் துரங்கி ஏதாவது கனவு கினவு கண்டாயா? சிவபெருமான் மாதிரி அப்படி இப்படி என்று உளறுகிறாயே?" ஏதாவது புதிய உண்மையை அறியலாம் என்று அவனை நையாண்டி செய்வதுபோல் அவன் வாயைக் கிண்டினேன். "ஐயோ! சாமீ. நான் பொய் ஏன் சொல்றேனுங்க, சாமி?. நிசமோ, இல்லையோ, அதைக் கண்ணாலே கண்டதும், அது என்னை ஒடிப் பாஞ்சு துரத்தினதும், நான் மயங்கி விழுந்ததும் இன்னும் நல்லா நினைவிருக்குதுங்க” - என்று கூறினான் அவன். அந்தக் குரலில் உண்மையாகவே பதற்றம் இருப்பதையும் நான் கவனித்தேன். பெட்ரோமாக்ஸ் லைட்டின் துணையால் மாந்தோப்பின் நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தோம். காய்களும் பழங்களும் களவாடப்பட்ட மாமரங்களையும் பலா மரங்களையும் அருகில் அழைத்துச் சென்று எனக்குக் காண்பித்தார் நெல்லையப்பப் பிள்ளை. அம்மரங்களின் கீழே ஒடிந்து கிடந்த சிறு கிளைகளையும்,உதிர்ந்து கிடந்த இலைகளையும் பிற அலங்கோலங்களையும் காணும்போது,திருடியவர்கள் பதற்றத்தோடும் அவசரமாகவும் திருடியிருக்கிறார்கள் என்பதை அனுமானிக் முடிந்தது. ஒரு பலாமரத்தின் கீழே விளக்கு வெளிச்சத்தில் ஏதோ மின்னியது. நான் விளக்கைத் தரையை ஒட்டித் தணித்து பிடிக்கச் சொன்னேன். காவற்காரன் அப்படியே செய்தான். கீழே குனிந்து அதைக் கையில் எடுத்தேன்.அது ஒரு சலங்கைக் கொத்து