பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

760

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“ஆமாம்! கமிட்டி கூட்டறத்துக்கு, மணிவிழா வசூல் அலைச்சலுக்கு எல்லாம் முதல்லே கையிலேருந்து நிறையச் செலவழியுமே…?”

“செலவழியத்தான் செலவழியும்! பொதுக்காரியத்திலே இதெல்லாம் பார்த்தா முடியுமா? இந்த மாதிரி சமயங்களிலே நான் அறிஞ்ச மட்டிலே ஒரே ஒருத்தர் தான் ரொம்ப ‘ஜெண்டில்மனா’ நடந்துக் கிட்டார்.”

“யார் அது”

“நம்ம பரசூர் பண்ணப்பர் மணிவிழாக் கமிட்டியிலே நான் ஈடுபட்டிருந்தப்ப பண்ணப்பரே கமிட்டி மீட்டிங்குக்கு முதல் நாள் என்னைக் கூப்பிட்டனுப்பினார். போனேன். “இந்தா பார், அன்பரசன்! உன் கஷ்டம் எனக்குத் தெரியும். பிஸினஸ் லைக்கா இருப்போம். ஆரம்பகால அலைச்சல்களுக்காக ஒரு பைசாக் கூட நீ உன் கையிலிருந்து செலவழிக்கப்படாது. இந்தா, இதிலே ரூபாய் முந்நூறு இருக்கு, ‘ஆரம்பச் செலவுக்காக ஓர் அன்பர் நன்கொடை’ன்னு புக்கிலே வரவு வச்சுக்க”ன்னு ஒரு கவர்லே புத்தம் புதுசா மூணு நூறு ரூபாய் நோட்டை வச்சி எங்கிட்டே நீட்டினார்.”

“அப்பிடியா…? அப்ப ஒண்ணு செய்யுங்க...? நம்ப மணிவிழா ஆரம்பச் செலவுக் கூட அப்பிடியே செய்துடலாம். நானே ஒரு முந்நூறு தந்துடறேன்…” -

“அடடே... என்னங்க இது? நான் சும்மா, ஒரு இதுக்குச் சொல்ல வந்தா...? நீங்களே பணம் தர்ரேங்கிறீங்களே...பரவாயில்லிங்க… வேணாம்...”

“நோ நோ! நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. உங்ககையிலேருந்துசெலவழிச்சுக் கட்டுபடியாகுமா?”

“சரி! ரொம்ப வற்புறுத்தறீங்க… அப்புறம் உங்க இஷ்டம்.”

வேங்கடநாதன் உள்ளே போய் முந்நூறு ரூபாய் கொண்டு வந்து அன்பரசனிடம் கொடுத்தார். அன்பரசன் அதிகக் கூச்சத்தோடும், வெட்கத்தோடும் அதை வாங்கிக் கொண்டான்.

“ஒரு விஷயம். நீங்க நல்லா ஞாபகம் வச்சிக்கணும், மிஸ்டர் அன்பரசன்!”

“என்ன சார்?

“மணிவிழா வசூலுக்கு முன் எனக்கு - நிறையக் கடன் இருக்குங்கிற மாதிரி சொல்லறத்துக்கு மறந்துடாதீங்க... இல்லாட்டி வசூல் டல்லாயிடும். இதெல்லாம் நானே சொல்லிக் கொடுக்கறது நல்லா இருக்காது. உங்களுக்குத் தெரியாதது இல்லே. எல்லாம் நீங்களே பார்த்துச் செய்யுங்க”

“எனக்குத் தெரியாதுங்களா எல்லாம்? எத்தினி மணி விழாவுக்கு அலைஞ்சிருப்பேன்? எவ்வளவு ஆளுங்களைப் பார்த்திருப்பேன்…?”

“ஆமாமா… உங்களுக்குத் தெரியாததை நான் என்ன சொல்லி விடப் போறேன்?” .

“அப்ப இப்பிடி வரட்டுங்களா? அடிக்கடி வந்து நிலைமையை ஐயாவுக்குத் தெரிவிக்கிறேன்.”