பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும்

771

மன வேதனையோடு அவர் உடல்நலம் குன்றிப் படுத்த படுக்கையாக இருந்த போது செல்லப்பாவின் பழைய டியூஷன் வாத்தியார் அவரைப் பார்த்து விட்டுப் போக வந்திருந்தார்.

“நாடு போகிற நிலையைப் பார்த்தால், இத்தினி தொழிலிலே முதலீடு செய்திருக்கவே வேண்டாம்னு தோணுது.இந்தத் தொழில்களாலே ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை கொடுத்துக் காப்பாத்தறோம். ஆனாலும் குழப்பக் காரன்களும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கும், நமக்கும் இடையே சண்டை மூட்டிவிடறாங்க. மன நிம்மதி கெட்டுப் போச்சு” என்று புரொபஸரிடம் அலுத்துக்கொண்டார் பெரியவர்.

அப்போது புரொபஸர் சிரித்துக் கொண்டேபெரியவரை ஒரு கேள்வி கேட்டார். “திரும்பி வந்ததும் உங்க பேரனுக்கும் இப்படிப்பட்ட சிரமங்களை எல்லாம் கொடுத்து, அவனைக் கஷ்டப்படுத்தப் போ றீங்க, இல்லியா?”

திவான் பகதூரால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. தம்மைப் போன்ற வல்லாள கண்டராலேயே சமாளிக்க முடியாத பிரச்னைகளை ஒரு சூது, வாதும் அறியாத பேரன் எப்படி எதிர் கொள்ளப் போகிறானோ என்பதுதான் அவருடைய பயமாகவும் இருந்தது. அதையே வாத்தியார் கேட்கவும் கிழவன் திகைத்தார்.

“புரொபஸர்! செல்லப்பா ஸ்வித்சர்லாந்திலேருந்து ஒரு கவிதை எழுதியனுப்பியிருந்தான். அது கொஞ்சம் நல்லாவே இருந்தது. நானே அதை ரஸிச்சேன்” என்று திவான் பகதூர் கூறிய போது புரொபஸரால் தம் காதுகளையே நம்ப முடியவில்லை. ராபர்ட்ஸனுடைய கடிதம் பற்றியும், பெரியவர் புரொபலரிடம் குறிப்பிட்டார். புதிய தலைமுறை இளைஞர்கள் பற்றிப் புரொபலரும் அதே கருத்தைப் பெரியவரிடம் தெரிவித்தார். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புரொபஸர் போய் விட்டார். போகும் போது திவான் பகதூரிடம் எற்பட்டிருக்கும் மன மாற்றத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டேதான் போனார்.

பெரியவரோ உடல் நலமும், மன நலமும் கெட்டுப் படுத்த படுக்கையானதிலிருந்து பேரனின் நினைவாகவே இருந்தார். அந்த வேளைகளில், அவர் பேரனின் கடிதங்களையும், ராபர்ட்ஸனின் கடிதங்களையும் திரும்பத் திரும்ப எடுத்துப் படிக்கலானார். அது அவருக்கு மனச்சந்துஷ்டி அளித்தது.

ராபர்ட்ஸன் எழுதியிருந்த வரிகள் இப்போது அவருக்கு வெறுப்பைத் தரவில்லை. டியூஷன் ஆசிரியர் கேட்ட கேள்வி இன்னும் கிழவரின் மனத்தை விட்டு அகலாமல் சுழன்றது.

‘பூப் போன்ற மெல்லிய மனத்தோடு கபடு சூது வாது இன்றி இருக்கும் பேரப் பிள்ளையாண்டானை இந்த உலகின் துரோகங்களிலும், வஞ்சகங்களிலும் முக்கி எடுத்துக் கஷ்டப்படுத்துவது அவசியந்தானா? பூக்களின் மலர்ச்சியிலும், நீரூற்றின் சிலிர்ப்பிலும், சண்பக மலரின் வாசனையிலும், சாயங்கால மேகங்களின் அழகிலும் மனத்தை லயிக்க விடும் ஒருவனை இன்வெஸ்ட்மென்ட், எஸ்டாபிலிஷ்மென்ட்