பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

782 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

தன்னைத் தொட்டுத் தழுவிக் கொஞ்ச முடியாத காரணத்தினால் அவரை இன்னும், பெரிய ஏழையாக்கியிருந்தது. பெரிதும் ஏக்கமுடையவராக்கியிருந்தது.

சாயங்காலம் மில்லிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது வேறு விதமாக இந்தது. குழந்தையை நெருங்க முயன்றார் அவர்.

அந்தக் குடிசைக்குச் சிறிது தொலைவு முன்னாகவே காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கிக் கொண்டு தாம் மட்டும் தனியே நடந்தார் அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை.

குடிசை வாயிலில் சாக்கடை ஒரமாகத் தெருப் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்தது குழந்தை சட்டைப் பையில் வாங்கி வைத்துக்கொண்டிருந்த சாக்லேட் துண்டுகளை எடுத்துக்கொண்டுபட்டுப்பூச்சி பிடிப்பதற்காகப் புதர் அருகே பதுங்கிப் பதுங்கி கிடக்கும் சிறுவனைப் போல் அந்தக் குழந்தையைப் பிடிப்பதற்காக அது தன்னைப் பார்த்துவிடாமல் அடிமேல் அடி வைத்து நடந்து நெருங்கினார் அவர்.

அவருடைய வலதுகையில் வர்ணத்தாளில் சுற்றிய சாக்லேட் துண்டுகள் நடுங்கின. ஆயிற்று! அவருடைய ஆசை நிறைவேறிவிட்டது. பூ மாலையைத் தொடுவது போல் அந்தக்குழந்தையின் பட்டு மேனியைத் தீண்டித் தோள் உயரத்துக்குத் துரக்கிவிட்டார். சாக்கடைச் சேற்றில் அழுந்தியிருந்த அதன் செவ்விளம் பாதங்களை அவருடைய வெள்ளைச் சட்டையில் பட்டு அழுக்காக்கி விடுகின்றன.

அழுக்காவது. இந்த அழுக்குத்தான் அவர் அடைய விரும்புகிற பரிசுத்தம், ரோஜாப் பூக் குவியலைத் தீண்டுவதுபோல எவ்வளவு சுகமாயிருக்கிறது இந்தக் குழந்தையின் உடம்பு?

திடீரென்று பின்புறமாக யாரோ வந்து தொட்டுத்துக்கிவிட்ட அதிர்ச்சியிலேயே பாதி மிரண்டு போயிருந்த அந்தக் குழந்தை தன் கண்களுக்கருகே அவருடைய முகத்தைப் பார்த்துவிட்டு வீலென்று அலறியது.

நாயினா. பூச்சாந்தி. பூச்சாண்டி .!” குடிசைப் பக்கமாகக் கையை நீட்டிக் கொண்டு வீறிட்டது குழந்தை அவருடைய கையிலிருந்த சாக்லேட் துண்டுகளைத் தட்டி விட்டுவிட்டது. குழந்தையின் உடம்பும் அவருடைய பிடியிலிருந்து விடுபட்டு இறங்கி ஒடுவதற்காகத் திமிறியது.

முகத்தில் சரிபாதி அடர்ந்த தாடியும் தாடியில்லாத இடங்களில் வெட்டுக் காயங்களுமாகக் கோரமான தோற்றத்தை உடைய மனிதன் ஒருவன் குடிசைக்குள்ளிருந்து ஓடிவந்தான்.

"நாயினா. பூச்சாந்தி." என்று கூறிக் கொண்டே குழந்தை அவனை நோக்கித் தாவியது.

அவன்தான் அந்தக் குழந்தையின் தந்தை போலிருக்கிறது. அவர் குழந்தையை அவனிடம் விட்டுவிட்டார். வீறிட்டு அழுததில் அதன் முகம் குங்குமக் குழம்பாய்ச்