பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

796 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

அந்த ஆச்சரியத்தைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவர் மனைவி உடனே பள்ளிக்கூடத்துக்குப் போன் செய்து குமாரசாமிக் கிழவருக்கும் அந்த அதிசயத்தைத் தெரிவித்தாள் அவள்.“அப்போ உங்கவீட்டிலேயும் காந்தி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியாச்சுன்னு சொல்லு” என்று அவளுக்கு உற்சாகமா, மறுமொழி கூறினார் அவர்.

பையனை அவனுடைய வீட்டில் கொண்டு போய் விடுவதற்கு முன் தம்முடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்த அவன் பெயர் என்னவென்று அறிந்துகொள்வதற்கு ஆவலுடன், “உன் பேரென்ன ராஜா” என்று நாச்சியப்பன் கேட்டபோது கணிரென்ற குரலில், "என் பேரு காந்தி” என்று பையன் பதில் சொன்னான். நாச்சியப்பனுக்கு ஒருகணம் மெய்சிலிர்த்தது.“எங்கே இன்னொரு தரம் சொல்லு” என்று மறுபடியும் அந்தப் பெயரை அவனிடமே கேட்டார் அவர் கங்கையில் எத்தனை முறை மூழ்கினாலும் புண்ணியந்தானே? (கலைமகள், தீபாவளி மலர், 1969)