பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————

இரண்டாம் தொகுதி/பனையூர் என்றொரு பல்கலைக்கழகம் 🞸 801

போகிறாளோ என்று தயங்கினாலும் அவன்பனையூருக்குப்போவதை நிறுத்தவில்லை. ஒரே ஒருநாள் தானே?பொறுத்துக் கொள்ளலாம் என்று புறப்பட்டான்.

ரிஸர்வ் செய்திருந்தபடியே அன்று இரவே பனையூரில் நிற்கிற பாஸஞ்சர் இரயிலாகத் தேடிப் பிடித்து ஏறிப் புறப்பட்டிருந்தான் சுகுமாரன்.

பனையூர் இரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிராமத்துக்குள்ளே போக ஆற்றோரமாக மூன்று மைல் நடந்து வேறு ஆக வேண்டும். காலை ஏழு மணிக்குப் பனையூர் வந்து சேர வேண்டிய பாஸஞ்சர் வண்டி ஒரு மணி முப்பத்தைந்து நிமிஷ்ம் லேட்டாக எட்டு முப்பத்தைந்துக்கு வந்து சேர்ந்தது.

இரயிலிலிருந்து இறங்கி அவன் நடந்து கிராமத்துக்குள் போய்ச் சேர்ந்தபோது காலை ஒன்பதரை மணி ஆகிவிட்டது.

அவன் வீட்டுக்குள் நுழைகிறபோது பெரியம்மா காப்பி போட்டுக் கொண்டிருந்தாள்.

“வா...”

“.....”

“செளக்கியமா? சித்தே இரு முதல் டிகாஷன் இறங்கியிருக்கு நல்ல காப்பியாத் தரேன், சாப்பிடு.”வெகுதூரத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து அவளுக்குப்பிடிக்காத எதையெதையோ பண்ணிக்கொண்டு வந்துவிட்டவனை வரவேற்பதுபோல் இல்லாமல் பக்கத்து ஊரிலிருந்து வருகிறவனை வரவேற்பது போல் சுகுமாரனுக்கு இந்த வார்த்தைகள் இயல்பாகவே இருந்தன. அவனும் தயங்கித் தயங்கிப் பெரியம்மாவைச் செளக்கியம் விசாரித்தான்.

காப்பியை அவனிடம் நீட்டும்போது, "நீ கொஞ்சம் வெளுத்திருக்கே” என்றாள் அவள். அவன் புன்முறுவல் பூத்தான்.

“குளிர் தேசமோல்லியோ” என்று அதற்குக் காரணம்போல மேலும் இரண்டு வார்த்தையையும் அவளே சேர்த்துச் சொல்லிக் கொண்டாள்.

இந்த அமைதி, இந்தப்பதவாகம், இந்த நறுவிசு எல்லாம் அவள் எந்தக் கணத்திலும் எவ்வளவு வேகமாகவும், தன்மேல் போர் தொடுக்கத் தொடங்கலாம் என்பதற்கு முன்னடையாளங்கள் போல் அவனுக்குத் தோன்றின. ஆனால் உடனே அப்படி எதுவும் நடக்கக் காணோம். பெரியம்மா வீட்டுப் பண்ணையாளைக் கூப்பிட்டு, “தோட்டத்திலே நல்ல பிஞ்சுக் கத்திரிக்காயா இருந்தாப் பறிச்சிண்டு வா! வந்திருக்கிறவருக்குக் கத்தரிக்காய் எண்ணெய்வதக்கல்னா ரொம்பப்பிடிக்கும்” என்று அவன் முன்னேயே உத்தரவிட்டாள்.

இப்போதில்லாவிட்டாலும் பகல் சாப்பாட்டின்போது பெரியம்மா அந்தச் சண்டையை ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. இரயிலில் தூக்கம் இல்லாததால் நன்றாகத் தூங்கிவிட்டுப் பகல் பன்னிரண்டு மணிக்குமேல் தான்.அவன் எழுந்திருந்தான். குளித்து உடைமாற்றிக் கொண்டு தயாரானபோது பெரியம்மாவந்து

நா.பா.II – 12