பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—————

இரண்டாம் தொகுதி/ பனையூர் என்றொரு பல்கலைக்கழகம் 🞸 783

இந்த உலகிலேயே மிகவும் நாகரிகமான ஒரு பெரிய மனுவியைப் பார்ப்பது போல பெரியம்மாவின் உருவத்தைப் பயபக்தியோடு திரும்பிப் பார்த்தான் அவன். பின்பு மெல்லத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் :-

‘இந்தக் கிராமத்தில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தால் நான் இங்கேயே வேலைக்கு வந்துவிடலாம். ஆனால்?’

‘வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! இதன் நாகரிகமும் அமைதியும் சீரழியும்படி இங்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டாம். இது இப்படியே இருக்கட்டும்.’

பனையூருக்கு எதற்குத் தனியான ஒரு பல்கலைக்கழகம்?

பனையூரே ஒரு பல்கலைக்கழகம் தானே!

அவன் கண்களில் மெல்ல நீர் கரைந்து பார்வை உழன்றது. இரயிலின் வேகம் அதிகமாயிருந்தது. (கல்கி, தீபாவளி மலர், 1970)