பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————

இரண்டாம் தொகுதி/அமெரிக்காவிலிருந்து ஒரு பேராசிரியர் 🞸 807

“நம்மூருக்கு ஒரு ஃபாரினர் புக் எழுதறத்துக்காக வரப்போறான். இங்கே நம் கிராமத்தோட கெளரவத்தைக் காப்பாத்தற மாதிரி நாம் நடந்துக்கணும்” என்று பெருமாள் கோவில் அர்ச்சகர், சிவன் கோவில் குருக்கள், வேளாளர் தெருப் பஞ்சாயத்து உறுப்பினர் வீரபத்திரபிள்ளை எல்லாரிடமும் சொல்லியிருந்தார் கைலாசநாதன். செய்தி கிராமம் முழுவதும் வேகமாகப் பரவிவிட்டது.

நாலைந்து நாட்களுக்குள் டில்லியிலிருந்து இரண்டாவது கடிதமும் வந்துவிட்டது.

1. ஆற்றங்கரையில் அரச மரத்தடியில் அந்தணர்கள் குழுவாக அமர்ந்து ஜபம் செய்யும் காட்சி.

2. வயலில் நாற்று நடும் பெண்கள் பாடும் கிராமீயப் பாட்டுக்கள். ஒரு கிராமீயக் கல்யாணம்.

3. கிராமத்துப் பெண்கள் கோலாட்டம் ஆடும் காட்சி, திருவிழாவின்போது பெருமாளுக்குப் பின், பிரபந்தம் சொல்லியபடி செல்லும் பிரபந்தம் சேவிப்பவர்களின் குரல்; சிவன் கோவிலில் ஒதுவார் பாடும் தேவாரம்.

4. கிராமத்தின் நெற்களம், வனபோஜனம், காமன் பண்டிகை போன்ற பொது விழாக்கள்.

இவ்வாறு பேராசிரியர் ஜான்சன் காணவும் ஒலிப்பதிவு செய்யவும் விரும்புகிற அயிட்டங்களை வரிசையாகக் குறித்தே அனுப்பியிருந்தான் மூர்த்தி. ஜான்சனையும் அவர் மனைவியையும் அல்லிப்பட்டி ஸ்டேஷனிலிருந்து கிராமத்துக்குள் எப்படி அழைத்து வருவது என்று யோசித்தார் கைலாசநாதன். ஸ்டேஷனிலிருந்து கிராமத்துக்கு இரண்டரை மைல் தொலைவு.அந்த வட்டாரத்தில் இரண்டு கார்கள்தான் உண்டு. இரண்டும் கலியான ஊர்வலங்களில் மாப்பிள்ளை அழைப்புக்காக வாடகைக்கு விடப்படும் கார்கள். கலியாண சீஸன் முடிந்ததும் பேட்ரி, டயர் எல்லாவற்றையும் கழற்றி ஓடாத காலங்களில் தேர்நிலையில் நிற்பதுபோல் நிற்க வைத்துவிடுவார்கள் அந்தப் பழைய கார்களின் சொந்தக்காரர்கள். இரண்டுமே இருபத்தைந்து வருஷத்துக்கு முற்பட்ட மாடல். அவற்றின் உரிமையாளர்களில் ஒருவரைச் சந்தித்துக் காரை ஓட்டத்துக்கு ரெடியாக்கச் சொல்லி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தார் கைலாசநாதன்.

ஜான்சன் தம்பதி அல்லிப்பட்டிக்கு வந்து சேருகிற தினத்தன்று காலையில் ஐந்து மணிக்கே எழுந்து தயாராகி விட்டார் அவர் பெட்டியில் மீதமிருந்த ஒரே சலவை வேஷ்டியையும் எடுத்தபோது அது நடுவாகக் கிழிந்திருந்தது. சட்டையில் வாழைத் தோட்டத்துக் கறைப் பட்டிருந்தது.

நீங்களும் உங்கலட்சணமும்! இதைக் கட்டிண்டு போனா சிரிக்கப் போறா அம்பி போன தடவை லீவுக்கு வந்திருந்தப்போ இங்கே மறந்துவிட்டுப் போன சூட்டையும்