பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————

இரண்டாம் தொகுதி / குரோட்டன்ஸ் * 815

வெளியில் போய்த் திரும்பப் போவதில்லை என்பதை அவள் அவனிடம் சொல்லியிருந்தாள். ஸ்டுடியோக்கள் எல்லாம் விடுமுறை; கால்ஷீட் எதுவும் கொடுக்கவில்லை. முழு ஒய்வு. சமையற்காரி ஊரில் இல்லாததனால் ஹோட்டலுக்கு அவ்வப்போது போய்வரும் வேலையும் கூர்க்காவிடம் சுமந்திருந்தது.

அவள் மாடி ஹால் விளக்குகளை அனைத்துவிட்டுப் படுக்கையறைக்குப் போனாள். படுக்கையறைக்கு நேரே தெருவைப் பார்த்த பால்கனியின் சுவரில் தொட்டிகளில் இருந்த பூஞ்செடிகள் கொஞ்சம் வாடியிருந்தன. இரண்டு மூன்று நாட்களாக அந்தச் செடிகளுக்கு யாரும் தண்ணிர் ஊற்றவில்லை என்பது ஞாபகம் வந்தது. குளியலறைக்குள் போய் பிளாஸ்டிக் வாளியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணிர் எடுத்துச் சென்று ஊற்றினாள். ஒரு வாளி நிறையத் தண்ணிர் எடுத்துக் கொண்டு போனால் ஒரே நடையில் மூன்று தொட்டிச் செடிகளுக்கும் அதையே ஈவு வைத்துச் சிறிது சிறிதாகப் பிரித்து ஊற்றிவிடலாம். ஆனால் அப்படிச் செய்துவிட்டால் ஒரே நடையில் வேலை முடிந்துவிடும். அப்போதிருந்த மனநிலையில் எதையாவது உடனே முடிந்துவிடாத எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் போல உணர்ந்திருந்தாள் அவள். எதையாவது தாறுமாறாக நினைக்கிற மனத்தை எதையுமே நினைக்கவிடாமல் உறங்கச் செய்துவிட்டுக் கைகளை எந்தச் செயலிலாவது பிணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படிப் பிணைத்துக் கொள்கிற எந்தச் செயலிலும் தரிக்கவும் முடியவில்லை. எவ்வளவோ மெதுவாக ஊற்றியும் பத்து நிமிஷங்களில் தண்ணிர் ஊற்றி முடிந்துவிட்டது.

வழக்கமாகப் பார்க்கும் இரசிகர்களின் பாராட்டுக் கடிதங்களை ஒரு கற்றை அள்ளி வந்து படுக்கையில் குவித்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் படிக்கலானாள். சோர்வாகவும், தனிமையாகவும் உணர்ந்த வேளைகளில் இந்தக் கடிதங்களைப் படித்து அவள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறாள். இன்றோ சோர்வும் தனிமையும், அந்த இரண்டும் அல்லாத, அவற்றையும் விடப் பெரிய வேறொன்றும் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தன. அது இன்னதென்று தெளிவாகப் புரியவில்லை; புரிந்து கொள்ள முடியவும் இல்லை.

சில இரசிகர்கள் தங்களுக்கு இருக்கும் அபார உற்சாகத்தில் விலாசங்கூட முழுமையாக எழுதாமல் ‘நடிகை பிரேமகுமாரி - சென்னை’ என்று மட்டுமே போட்டிருந்தார்கள். அவளுடைய பிராபல்யத்தால் கடிதங்கள் தவறாமல் வந்து சேர்ந்திருந்தன.

அன்று என்னவோ வழக்கத்துக்கு மாறாக நாலைந்து கடிதங்களைப் படித்ததுமே அவையும் சலிப்பூட்டின. எல்லாப் பாராட்டுக் கடிதங்களுமே ஒரே ராகத்தைத் திரும்பத் திரும்பக் கேட்பது போல் இருந்தன. காரண காரியங்களை உணர்ந்து பாராட்டாத குருட்டுப் புகழாகவும் அவை தோன்றின. அவளுடைய உடலழகிலும், அதனால் விளைந்த விடலை மயக்கத்திலுமே அந்தப்பாராட்டுக்கள் பிறந்திருந்தனவே தவிர, நடிப்புத்திறமையை உணர்ந்து எழுதப்பட்டதாக ஒரு கடிதமும் தோன்றவில்லை. காதற் கடிதமாக நேரடியாய் எழுதத் தெம்பில்லாத ஆட்கள் பாராட்டுக் கடிதங்கள்