பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

816 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

என்ற பெயரில் அவற்றை எழுதியிருந்தார்கள். சிலர் அதிலும் துணிந்து பச்சையான காதற் கடிதங்களாகவே எழுதியிருந்தார்கள்.

கடிதங்களும் படிப்பதற்கு அலுப்பூட்டும்படி அன்று தனக்கு வந்த மன வேதனை என்ன என்று தானே புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள் அவள்.

விளக்கை அணைத்துவிட்டுஇருளின் சுகத்தில் தூங்கிவிடமுயன்றாள்.அரைமணி நேரம் புரண்டு புரண்டு படுத்தபின் துக்கமும் வரவில்லை. மறுபடியும் விளக்கைப் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தாள்.

இருந்தாற்போலிருந்து முப்பது வயது வரை திருமணம் செய்து கொள்ளாமலே படங்களில் நடித்துப் புகழேணியின் உச்சிக்குப் போய் விட்டு அப்புறம் திடீரென்று ஒருநாள் திருப்பதியிலோ குருவாயூரிலோபோய்க் கல்யணம் செய்துகொண்டுவிட்டுப் படிப்படியாய் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு கணவனோடு வாழத் தொடங்கி விட்ட சில சக நடிகைகளைப் பற்றி நினைத்தாள் அவள். அந்த நினைவை விரைந்து தவிர்க்க முனைந்தும் திரும்பத் திரும்ப அவள் மனத்தில் அதுவே வட்டமிட்டது.

திடீரென்று மேஜை டிராயரைத் திறந்து பாங்குப் பாஸ் புத்தகங்கள், டிபாசிட் ரசீதுகள், கணக்கு வழக்கு எல்லாவற்றையும் பார்த்தாள்.

பாங்கில் பிக்ஸட் டிபாஸிட் மட்டும் இருபது லட்சத்துக்கு மேல் இருந்தது. லாக்கரில் மூன்று லட்சத்துக்கு நகைகள் இருந்தன. கணக்கில் வராத தொகையைச் சில தனி ஆட்களுக்கு வட்டிக்குக் கொடுத்திருந்தாள்.பங்களா மதிப்புப் பதினைந்து லட்சம் இருக்கும். ஒரு பெரிய கார்.மற்றொரு சிறிய கார் மகாபலிபுரம் போகிற வழியில் பத்து ஏக்கர் அளவில் ஒரு தென்னந்தோப்பு. இப்போது ஒப்பந்தமாகியிருக்கிற படங்களோடு விட்டு விடுவதானால் கூட இன்னும் ஏழு படங்கள் இருந்தன.

மற்ற நடிகைகளுக்கும் தனக்கும் உள்ள ஒரு வேறுபாடும் அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது. எப்போதாவது தீர முடியாத மனவேதனை வந்தால் அவர்களுக்கு எல்லாம் ஆறுதல் கூற அம்மாவோ, அப்பாவோ, உறவினரோ இருந்தார்கள். தனக்கு யாருமில்லை என்பதை நினைத்தபோது அவள் தவிப்பு வளர்ந்தது. முதற் படத்தை முடித்துக் கொஞ்சம் பெரிய வீட்டைத் தேடி வாடகைக்குக் குடிபோன வருஷம் அம்மா காலமானதை எண்ணியபோது அவள் கண்களில் நீர் நெகிழ்ந்தது. அம்மா போன பின்புதான் மளமளவென்று படங்கள் வந்தன. பணம் வந்தது; புகழ் வந்தது. ‘என்ன வந்து என்ன ஆகப் போகிறது? நான் தனி’ என்பதை அவள் பல முறை உணர்ந்து தவித்திருந்தாலும் இன்று படுகிற அளவு கொடுமையான சலிப்பையும் தனிமையையும் அவள் என்றுமே பட்டதில்லை.

- பாங்குப் பாஸ் புத்தகங்கள், கணக்கு வழக்குகளை டிராயரில் திணித்து மூடினாள். அதிலும் மனம் செல்லவில்லை. பால்கனிக்குப் போய் நின்று பங்களாவின் தோட்டத்தையும் புல்வெளியையும் பூஞ்செடிகளையும் அந்த நேரத்தில் அவை யனைத்தும் எழுதிவைத்த சித்திரம்போல் தெரிவதையும் பார்த்தாள். இரவும்,பனியும்,