பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————

இரண்டாம் தொகுதி / குரோட்டன்ஸ் * 817

மங்கிய தெருவிளக்குகளும் எல்லாம் நீலநிற மஸ்லின் துணியால் போர்த்தினாற்போல் தென்பட்டன. தண்ணிர் ஊற்றிய பின்பும் பால்கனியிலிருந்த தொட்டிச் செடிகள் இன்னும் வாடித்தான் இருந்தன. காலையில்தான் அவை சரியாகும் என்று அவளாக நினைத்துக் கொண்டு உள்ளே திரும்பினாள் மறுபடியும் மேஜையருகில் போய் அந்தக் குருவாயூர்க் கல்யாணப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள். பெருமூச்சு விட்டாள். ‘உனக்கு எத்தனை குழந்தைகள்’ என்று டிரைவரிடம் கேட்டதை நினைத்துக் கொண்டாள்.நடிப்பை நிறுத்திக் கொண்டு இருந்தாற் போலிருந்து கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்ட புகழ்மிக்க சக நடிகைகளைப் பற்றி மீண்டும் நினைத்தாள்.

மறுபடியும் ஒரு கிளாஸ் தண்ணிர் குடித்தாள். திரும்பத் திரும்பச் செய்ததையே செய்து கொண்டிருந்தாள். புதிதாக என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை.

உடனே துக்க மாத்திரை சாப்பிட்டு விட்டுத் துரங்கலாமா என்று நினைத்தாள். ‘ஓவர்டோஸ்’ ஆகிவிடுமோ என்று பயமாகவும் இருந்தது.சில நாட்களில் அப்படியும் ஆகிச் சமையற்காரி டாக்டருக்குப் போன் செய்து வரவழைக்க நேர்ந்திருக்கிறது. இன்று அப்படி ஆனால் ஃபோன் செய்து டாக்டரைக் கூப்பிடச் சமையற்காரிகூட இல்லை. தூக்கம் வரவில்லையே என்ற வெறியில் கை கட்டுப்பாடின்றி மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டாலும் போட்டுவிடும். படுக்கையறை விளக்கை அணைக்காமலே கீழே இறங்கி ஒவ்வொன்றாக எல்லா விளக்குகளையும் போட்டுக் கொண்டு தோட்டத்தில் போய் உலாவினாள். பவழமல்லிகை மணம் குப்பென்று வந்து மோதியது. வழக்கமாக அந்த முன்நேரத்திலேயே அது பூத்துவிடும். விளக்குகள் எரிவதையும் தோட்டத்தில் யாரோ நடப்பதையும் கண்டு கூர்க்கா எழுந்து வந்தான். நடப்பது எஜமானி தான் என்று புரிந்ததும் ஒரு சலாம் வைத்துவிட்டு மெளனமாகத் திரும்பினான் அவன். அவனால் எப்படி இரவில் தூங்காமல் இருக்க முடிகிறது என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிலா ஒளியில் அவன் நடந்து வந்தது ஒரு கம்பீரமான ராணுவக்காரன் வருவது போலிருந்தது. தக்காளிப் பழம்போல் செழித்த கன்னமும் உள்ளாழ்ந்த இடுங்கிய கண்களும் மீசையுமாக அவன்கூடத் திடீரென்று மிக மிக அழகாயிருப்பதுபோல் பட்டது அவளுக்கு.

அப்படியே தோட்டத்தில் கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு மறுபடி மாடிப் படியேறி மேலே போகும்போது விளக்குகளை அணைக்க அவள் மறந்திருந்தாள்.

அவள் மேலே போய்ப் படுக்கையறையில் நுழைந்தபோது கீழே கூர்க்கா வந்து மறுபடி பொறுமையாக ஒவ்வொரு ஸ்விட்சாக அணைக்கிற சப்தம் அவளுக்குக் கேட்டது.

ஏதோ நினைத்துக் கொண்டவள்போல் படுக்கையறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடி முன் போய் நின்றாள் அவள் புருவங்கள் கத்தரிக்கப்பட்டு மேக்கப் இல்லாமல் திடீரென்று ஒரு சீனாக்காரிபோல் தன் முகம் தெரிவதாகத் தோன்றியது அவளுக்கு. அங்கங்களும் உடற்கட்டும் செயற்கையானதொரு செழிப்பைக்

நா.பா. II - 13