பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

646 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் மறைந்திருக்கும் வேட்டைக்காரர்கள் தாங்கள் வைத்த குண்டுகள் வெடித்து மிருகங்கள் செத்ததும் மறைந்திருந்த இடங்களிலிருந்து வெளிப்பட்டு, வேட்டை களை எடுத்துக் கொண்டு போவார்கள். முத்துவேலு நாயக்கன், வேட்டையிலும் நல்ல பரிச்சயம் உள்ளவனாகையால் அவனுக்கும் இந்த நாட்டு வெடிகுண்டு செய்வதில் நல்ல பழக்கம் உண்டு.தைப் பொங்கலுக்கு முதல் நாள் மாலை அம்மன் கோவில் புல்வெளிக் காட்டில் ஏழு எட்டு இடங்களில் பச்சைக் களிமண் உலராத குண்டுகளைக் கொண்டுபோய் வைத்துவிட வேண்டும்.நிச்சயம் நான்கைந்து மான்களாவது குண்டுகளில் சிக்கிச் சாவது உறுதி. குண்டுகள் உலர்ந்து சவ்வு மிதிபட்டு வெடிப்பதற்குள் இரவு நேரம் வந்து விடுமாகையினால் யாரும் பார்க்காமலே காரியம் நடந்துவிடும். இரவு எட்டு ஒன்பது மணிக்குள் வேட்டை யில் அகப்பட்டமான்களின் உடல்களோடுதுரையைப் போய்ச் சந்திக்கலாம்.இதுதான் 'சரியான யோசனை’ என்று இவ்வாறு தனக்குள் ஒரு தீர்மானம் செய்துகொண்டிருந்தான் முத்து வேலுப் பயல்.அணைக்கட்டில் பாறை உடைப்பதற்காக வந்திருந்த வெடிமருந்தில் கொஞ்சம் தயார் செய்துவைத்தான்.துரையோடு உலாவப் போனதற்கு மறுநாள் மாலை தன் திட்டப்படியே புல்வெளிக் காட்டில் ஒர சாரங்களின் குண்டுகளை அங்கங்கே போட்டு வைத்துவிட்டு அவைகள் வெடிக்க இரவு ஏழரை மணிக்குமேல் ஆகுமென்று அனுமானித்துக் கொண்டு கிளம்பினான். திரும்பவும் ஏழேகால் மணிக்குத் தான் வந்தால் குண்டுகள் வெடித்து மான்கள் சாவதை மறைந்திருந்து காண்பதற்காக ஒரு புதரையும் அப்போதே அடையாளம் பார்த்து வைத்துவிட்டுத்தான் புறப்பட்டான். தன் காரியம் அவ்வளவு கச்சிதமாக வெற்றியுடன் முடியும் என்று நம்பிக்கை பயலுக்கு மீண்டும் ஏழு மணிக்கு மேல் கோணிப் பையோடு வந்து மான்களை அடைத்துக் கொண்டு போகவேண்டிய வேலைதான் பாக்கி என்ற திருப்தியோடு ஊருக்குள் வந்துவிட்டான் நாயக்கன். பொங்கல் படையலன்றைக்குத் தோரணங்களிலிருந்து அம்மனுக்குப் போடுகின்ற மாலை வரைக்கும் எல்லாம் அருகம்புல்லோடு சேர்த்தே தொடுக்கவேண்டுமென்று ஒர் சம்பிரதாயம் உண்டு. இதற்கு அந்தப் புல்வெளி அருகையே பயன்படுத்த வேண்டும். முத்துவேலு நாயக்கன் வெடிகுண்டுகளை வைத்துவிட்டுப் போய் ஒரு நாழிகை கழிந்திருக்கும். மாலை, ஜாடனை வகையறாக்களுக்காக அருகம்புல் கொண்டு போவதற்காகப் பூசாரியும் வடிவேலுப் பண்டாரமும் புல்வெளிக்கு வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் தற்செயலாக நாயக்கன் "உழப்பிவிட்டுப் போன பக்கமே புல்லுக்காக இறங்கமேண்டுமா? பண்டாரம் முதலில் ஒரு களிமண் உலராத குண்டைக் கண்டெடுத்ததும் இருவருக்கும் எந்தப் பயலோ, மான் வேட்டைக்காக அக்கிரமம் செய்துவிட்டுப் போயிருக்கிறான் என்ற சந்தேகம் பலமாக ஏற்பட்டு விட்டது. இதன் விளைவாக அந்த நெட்டிற்குச் சால் பிடித்து இருவரும் அலசிப் பார்க்கத் தொடங்கினர்.அரை நாழிகையில் முத்துவேலுநாயக்கன் வைத்துவிட்டுப் போயிருந்த அத்தனை குண்டுகளையும் வைத்தவனை வாயாரச் சபித்துக் கொண்டே கண்டெடுத்து விட்டனர் பூசாரியும் பண்டாரமும் “கலி காலமையா அக்கிரமம்