பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

892

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“எங்கேம்மா? தோலுக்காவும்னு செத்த பாம்பைக் கொண்டாந்துட்டியா?”

“இல்லே தாத்தா! பெரிய பாம்புன்னாலே தூக்கிக் கொண்டாற முடியலை என்னைக் கொத்தப் பார்த்திச்சு. கொத்தறதுக்குக்குள்ளார அடிச்சுத் தீர்த்துப் போட்டேன்…”

முன்னால் வாயிற்புறம் கதவு பலமாகத் தட்டப்பட்டது. பூட்ஸ் கால்கள் தரையை மிதிக்கும் ஒசைகள் கேட்டன.

“வாசல்லே யாரோ கதவைத் தட்டுறாங்கம்மா வா.போகலாம்” என்றார் தாத்தா.

“நீங்க இருங்க தாத்தா! நான் போய்த் திறக்கிறேன்” என்று அவள் அவரை முந்திக் கொண்டு வாயிற்புறம் விரைந்தாள்.வந்திருப்பவர்கள் போலீஸ்காரர்கள்தான் என்பது அவளுக்குப் புரிந்தது.இனி வரவிருப்பதை நினைத்தும் அவள் கால்களோ, நெஞ்சமோ சிறிதும் நடுங்கவில்லை. ஏனெனில், தான் எந்தத் தவறும் செய்ததாக அவளுக்குத் தோன்றவில்லை. அன்றொரு நாள் ஆதிபராசக்தி மாகாளி துர்க்கை மஹிஷாசுரனை மிதித்துக் கொன்றது தவறு என்றால்தானே இன்று இவள் செய்ததும் தவறாகும்.

(தீபம், தீபாவளி மலர், 1974)