பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

906

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தேவையைக் கூட அவர் கவலைப்பட்டோ. சிரமப்பட்டோ நிறைவேற்றிக் கொள்வதில்லை. பாலமுருகன் மளிகை ஸ்டோர்ஸில் (விநாயகம் பிள்ளையின் கடை) லாகிரி வஸ்துக்களான பொடி, புகையிலை, சிகரெட், பீடி ஆகியவற்றை விற்பதில்லையானாலும், கடைப் பக்கம் வந்து போகிறவர்களில் யார், யார் பொடி போடுகிறவர்கள் என்பது விநாயகம் பிள்ளையவர்களுக்கு மனப்பாடம். அவருக்குப் பொடி போடத் தோன்றும் வேளையில் சரியாகச் சொல்லி வைத்து வரச் சொல்லியிருந்தது போல் யாராவது வந்து சேருவார்கள். பிறருடைய வரவிலிருந்து அவருடைய தேவைகள் நிறைவேறி விடும்.

“அண்ணாச்சி! கொஞ்சம் மட்டையை இந்தப் பக்கம் நீட்டுதியளா...” என்று இரவல் கேட்பதையே நிர்ப்பயமாகவும், சுதந்திரமாகவும் கேட்டு நிறைவேற்றிக் கொள்வார் விநாயகம் பிள்ளை. பிறருடைய நஷ்டத்தைப் பற்றி அவர் எப்போதுமே அதிகமாகக் கவலைப்பட்டதில்லை.விநாயகம் பிள்ளையின் வியாபாரத் தத்துவங்களில் அதுவும் ஒன்று. “வியாபாரியாக இருக்கப்பட்டவன் தன்னுடைய நஷ்டத்துக்கு மட்டுமேதான் கவலைப்பட வேண்டுமே ஒழியப் பிற்ருடைய நஷ்டத்துக்காகச் சிறிதும் கவலைப்படக் கூடாது” என்பது அவரே அடிக்கடி சொல்லுகிற வாக்கியம். அந்த வாக்கியத்தை அவர் சொல்கிறபடியே ஒரு வார்த்தை கூட நஷ்டப்படாமல் இங்கே எழுதியிருக்கிறேன்.

உயர்திரு விநாயகம் பிள்ளையவர்களின் ‘பாலமுருகன் மளிகை ஸ்டோர்ஸில்’ உபதேசத்தைத் தவிர எல்லாப் பண்டங்களும் ரொக்க வியாபாரம்தான். ‘இன்று ரொக்கம் நாளைக் கடன்’ என்று சில வியாபாரிகள் போர்டு மாட்டியிருப்பது போல் விநாயகம் பிள்ளையவர்களின் கடையில் எந்த விதமான போர்டும் வாடிக்கைக் காரர்களை மிரட்டிக் கொண்டு தொங்காது. காரணம், திருவாளர் விநாயகம் பிள்ளையே அவருடைய கடைக்கு ஒரு நிரந்தரமான போர்டு மாதிரி. அங்கே கிடைப்பவை, கிடைக்காதவை விலை, பேரம் எல்லாம் அவருடைய முகத்திலும், கண்களிலும் தெளிவாக எழுதப்பட்டாற் போலத் தெரிந்து கொண்டிருக்கும். போர்டுகளில் இல்லாத, இருக்க முடியாத கறார் - கண்டிப்பு உணர்ச்சியும் அதிகப்படியான தகுதியாக அந்த முகத்தில் இருக்கும்.போர்டுக்கும், அவருக்கும் இது ஒரு வித்தியாசம்.

திருவாளர் விநாயகம் பிள்ளைக்குத் தான தருமங்களில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அப்படியே நம்பிக்கை இருந்தாலும், அதை வெறும் நம்பிக்கையாக மட்டும் வைத்துக் கொள்வதில் அவருக்கு எந்த விதமான ஆட்சேபணையும் கிடையாது. செயலாக ஆக்கிக் கொள்வதற்கு மட்டும் அவருக்கு அவகாசம் இல்லை.

“நான் சொல்ல வர்ரது என்னான்னு கேட்டுக்கிடுங்க. அதுவும் பெறவு நீங்க சொல்லறதைத் தாராளமாகச் சொல்லலாம். என்னைப் போல வியாபாரியா இருக்கிறவங்களுக்கு வியாபாரத்தைச் செம்மையாய்ச் செய்துக்கிட்டிருக்கிறதே பெரிய தருமந்தான். அப்புறம் வேறே தருமம் எதுக்குங்க? நாங்க யாரிட்டவும் தருமத்துக்கு