பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : மறத்திற்கும் அதுவே துணை

915

சொல்வதற்குத் தயங்கினான். வற்புறுத்திய போது “துரை அதை யாரிடமும் சொல்லக் கூடாதுன்னிருக்காருங்க” என்று இழுத்தான்.

“துரைதான் லண்டனுக்குப் போயாச்சே! நீ இனிமே என்ன செய்யப் போறே? என் ஓட்டல்லேயே ஒரு நல்ல வேலையாத் தரேன். பார்க்கறியா?” என்று நான் சொன்னதும், அவன் சிறிது வழிக்கு வந்தான்.

“சொல்றேங்க! ஆனா அதை நீங்க வேற யாரிட்டவும் சொல்லக் கூடாது. உங்க வீட்டிலே ஸீஸரைச் சரியாக் கவனிக்கலேன்னு துரைக்கு உங்க மேலே ரொம்பக் கோபம். உங்களை வாய் ஓயாமத் திட்டிக்கிட்டிருந்தாரு, அப்புறம் நாயை விமானத்திலே அழைச்சிட்டுப் போக எழுதிக் கேட்டுப் பார்த்தாரு. ஒண்ணும் முடியற வழியாயில்லே.

“கடைசியிலே அவரு புறப்படறன்னிக்குப் பகல் பன்னிரண்டு மணிக்குக் கோயம்புத்துார்லே பிளேன் ஏறணும்னு முடிவாச்சு. அதற்கு முதல் நாளே எஸ்டேட், பங்களா, கார் எல்லாம் வித்தாச்சு. ஏர்போர்ட்டுக்கு கூட என்னை டாக்ஸிதான் பேசச் சொன்னாரு. புறப்படற அன்னிக்கு என்னை அதிகாலையிலேயே போட்டோ கிராஃபரையும் கூட்டிக் கிட்டு வரச் சொன்னாரு.

மறுநாள் காலையிலே போட்டோகிராஃபரோட பங்களாவுக்கு ஆறு மணிக்கே போயிட்டேன். துரை முதல் நாள் ராத்திரி தூக்கமில்லாமே, நிறையக் குடிச்சிருக்கணும்னு தெரிஞ்சிச்சு.

“டே ஜோசப்! வேறு யாரிட்ட விட்டாலும், நான் கவனிச்ச மாதிரி இத்தினி ராஜோபசாரமா என் ஸீஸரை இன்னொருத்தன் கவனிப்பானாடா”ன்னு கேட்டாரு.

“அது ரொம்பக் கஷ்டம் தொரை! நீங்க அதை உயிருக்குயிராப் பெத்த மகன் மாதிரி வளர்க்கிறீங்க. அப்படி எவனும் செய்ய மாட்டான்”னேன்.

“நான் சொன்னதைக் கேட்டுத் துரை பெருமூச்சு விட்டாரு. கொஞ்சம் யோசிச்சாரு அப்புறம், ‘ஆல் ரைட்! போட்டோ கிராஃபரைக் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லு, நீ ஸீஸருக்கு பிரியமான இறைச்சியைச் சமைச்சுக் கொண்டா. ரெண்டு கார்லண்ட்ஸுக்குச் சொல்லி அனுப்பு’ன்னாரு ஸீஸரை அவரே குளிப்பாட்டி வாசனைப் பவுடர் போட்டாரு. நான் போட்டோகிராஃபரை இருக்கச் சொல்லி விட்டு, மாலைக்குச் சொல்லி அனுப்பிய பின் இறைச்சி சமைக்கச் சமயலறைக்குள் நுழைந்தேன். .

“கறி சமைத்ததும், தன் கையாலேயே வாங்கி ஸீஸரை மடியில் வைத்துப் பிரியமா வயிறு நிறைய ஊட்டினார் துரை. ஸீஸரும் பிரியமாகச் சாப்பிட்டது. அப்புறம் வழக்கமில்லாத வழக்கமா, அதுக்கு ஆப்பிள் கூட நறுக்கிக் கொடுத்தாரு. ‘ஜோசப்! போட்டோகிராஃபரைக் கூப்பிடு. மாலைகளைக் கொண்டா’ன்னாரு. நான் மாலைகளைப் பிரித்துக் கொடுத்தேன். தன் கழுத்தில் ஒன்றும், நாய் கழுத்தில் ஒன்றுமாகப் போட்டுகிட்டாரு. படம் எடுக்கச் சொன்னாரு. ஸீஸரை உட்கார வைத்து, அவரு பக்கத்திலே நிற்கிறாப் போல, அது அவரைத் தழுவிக்கிறாப் போல, அவரு மேலே