பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

922

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அவசியத்தை வற்புறுத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு ‘செக்’கும் உடனே எழுதி நீட்டினார்.

“அது எங்க கிராமத்தில் ஒரு பெரிய விடாக்கண்டன் கொடாக் கண்டன் கிட்டச் சிக்கியிருக்கு. நேரே போனாத்தான் முடியும்” என்றான் வேல்சாமி.

பதிப்பாளர், “இந்தாங்க இதையும் எதுக்கும் கையோட வச்சுக்குங்க. அந்த விடாக்கண்டன் ஏதாவது தகராறு பண்ணினால், என்ன செய்யறது?’ என்று மேலும் ரொக்கமாக ஆயிரம் ரூபாய் வேறு தனியே ஒரு கவரில் வைத்து வேல்சாமி வசம் கொடுத்தார். எப்படியாவது புத்தகம் வெளி வந்தாக வேண்டும் அவருக்கு.

அடுத்த வாரம் கவிஞன் வேல்சாமி காரிலே நல்லப்பன்பட்டி கிராமத்துக்குப் புறப்பட்டான். ஒரு காலத்தில் தன்னை நம்பிக் கடன் கொடுக்க மறுத்த பழ. சொக்கநாதன் செட்டியாரை மருட்டவேண்டும் என்பதற்காக ஒரு பளீரென்ற சவர்லே இம்பாலா காரில் போய் இறங்கிக் “கணக்கு கிணக்கு ஒண்ணும் பார்க்க வேண்டாம்! இந்தாங்க.ஆயிரம் ரூபாயை வைச்சுக்குங்க.அந்த நாற்பது பக்கம் நோட்டுப் புத்தகத்தை அடகு மீட்டுக்கறேன்” என்பதாகச் சொல்லி பழ.சொ. வைத் திணற அடிக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டே காரில் போனான் வேல்சாமி. கார் மாலை

மூன்றரை மணிக்கு நல்லப்பன் பட்டியை அடைந்தது.

கடை வாசலில் திடீரென்று கப்பல் போல் ஒரு பெரிய கார் வழுக்கிக் கொண்டு வந்து நின்றதைப் பார்த்ததும், பழ. சொ. மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டு மீண்டும் உற்றுக் கவனித்தார்.

“மறந்துட்டீங்களா? நான்தான் வேல்சாமி. அந்த நாளிலே உங்க திருக்குறள் கழகக் கவியரங்கத்திலே எல்லாம் பாடியிருக்கேனே? ஞாபகம் இல்லையா?”

“அடேடே தம்பியா? வாங்க தம்பி! உட்காருங்க. ஆளே அடையாளம் தெரியாமே மாறிப் போயிட்டீங்களே?. நல்லா இருக்கீங்களா? செளக்கியம் எல்லாம் எப்படி? இன்னிக்குதான் உங்களை நினைச்சேன், பழைய பாக்கி எல்லாம் சேர்த்துப் பார்க்கறப்ப அந்தப் பத்து ரூபாய் சொச்சம் அப்படியே இருந்திச்சு.”

“நானும் அதுக்காகத்தான் வந்தேன் செட்டியார் சார்! கணக்குக் கிணக்கு ஒண்ணும் நீங்க பார்க்கவேண்டாம்.அன்னிக்கு அந்தப் பத்து ரூபாய் நீங்க தரலேன்னா, நான் மெட்ராஸ் புறப்பட்டுப் போய் இன்னைக்கி இவ்வளவு நல்லா இருக்க முடியாது. ஏதோ நீங்க நல்ல மனசோடஉதவி பண்ணினீங்க. நான் இன்னிக்கு வசதியா இருக்கேன். இந்தாங்க இதைக் கொடுத்திட்டு, என்னோட நாற்பது பக்கம் நோட்டுப் புத்தகத்தை நான் அடகு மீட்டுக்கறேன்” என்று ஆயிரம் ரூபாய் அடங்கிய கவரை எடுத்துப் பழ. சொவிடம் நீட்டினான் வேல்சாமி.

பழ. சொக்கநாதன் செட்டியார் அதைக் கையில் வாங்கிப் பிரிக்காமலே கீழே வைத்து விட்டுப் பேரேட்டை எடுத்துப் புரட்டிப் பார்த்து, “தம்பி! ரசீது