பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128. ‘இது பொது வழி அல்ல’

ண்ணப்ப முதலியார் கார்ப்பரேஷன் தேர்தலுக்கு நிற்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்தத் தொகுதியில் கடந்த இருபது வருஷங்களுக்கும் மேலாக அவர் செல்வாக்கும் புகழும் பெற்றிருந்தும் கூட முந்திய தேர்தல்களில் நின்றதில்லை. தொகுதியிலுள்ள பல காலி மனைகளுக்கும், வீடுகளுக்கும் சொந்தக்காரர் அவர். அவரிடம் குடக்கூலிக்கு இருப்பவர்களும், அவருக்குச் சொந்தமான மனைகளில் குடிசைகள் போட்டுக் குடியிருப்பவர்களும் ஓட்டுப் போட்டாலே போதும். இந்த மாபெரும் வசதி இருந்தும் கடந்த பல ஆண்டுகளில் அவர் ஏன் தேர்தலுக்கு நிற்கவில்லை என்பதும், இந்த ஆண்டில் திடீரென்று ஏன் நிற்கிறார் என்பதும் சேர்ந்தே பலருக்கு வியப்பாயிருந்தது. அதுவும் எந்தக் கட்சிச் சார்பும் அற்ற சுயேச்சை வேட்பாளராக இப்போது அவர் நிற்கிறார். பூட்டுச்சின்னம் வேண்டுமென்று கேட்டுப் பெற்றிருந்தார் அவர்.

அதனால் ‘பூட்டுக்கு வோட்டு’ - என்று எதுகை நயத்தோடு அழகாக கோஷம் போட்டு ஓட்டுக் கேட்க வசதியாயிருந்தது. வேறு தேர்தல் சின்னம் பெற்றிருந்தால், இப்படி எதுகை நயத்தோடு ஓட்டுக் கேட்க முடியுமோ, முடியாதோ? பூட்டுக் கிடைத்ததே நல்லதாய்ப் போயிற்று. ‘பூட்டுக்குவோட்டு’ என்று.அவருடைய ஆட்கள் எதுகை நயத்தோடு கூறியதையே எதிர்த் தரப்பினர் காலை ஒடித்து விட்டு ‘பூட்டுக்கு வேட்டு’ - என்று கிண்டல் செய்து வந்தனர். அவருடைய ஆட்கள் சுவரில் எழுதியவற்றிலும், ஒட்டியவற்றிலும் பூட்டுக்கு வோட்டு - என்பதில் காலை அழித்து. வேட்டு வைப்பதிலும் எதிர்த் தரப்பு அக்கறை காட்டியது. கண்ணப்ப முதலியார் தேர்தலுக்கு நின்றதற்குக் காரணம் கடந்த பல ஆண்டுகளாய் அந்தத் தொகுதியின் கவுன்சிலராய் இருக்கும் முனிவேலனோடு அவருக்கு ஏற்பட்ட ஒரு தகராறுதான் என்று சிலர் சொல்லுகிறார்கள். கவுன்சிலரான சில ஆண்டுகளிலேயே முனிவேலன் பத்து டாக்ஸி, ஒரு பங்களா, செம்பரம்பாக்கத்தில் இருபது ஏக்கர் சவுக்குத் தோப்பு ஆகிவற்றுக்கு அதிபதி ஆகிவிட்டதைப் பார்த்து முதலியாருக்கும் நைப்பாசை தட்டியிருக்க வேண்டும் என்று சிலர் வம்படியாகவும் சொல்லுகிறார்கள். எது காரணமாயிருந்தாலும் அவர் நிற்கிறார் என்பது உறுதியாகி விட்டது. அதில் சந்தேகமில்லை. ஜெயிப்பார் என்பதிலும் சந்தேகமில்லை என்றுதான் கூற வேண்டும்.

போட்டியும், நேரடிப் போட்டிதான். அவருக்கும், முனிவேலனுக்கும் ‘ஸ்டிரெயிட் கண்டெஸ்ட்’. முனிவேலன் தேர்தலுக்குச் செலவு செய்யவில்லை. வரவைப் பற்றித்தான் எப்போதுமே அவனுக்குக் கவலை. செலவு செய்ய அவனுக்குத் தெரியாது. செலவு செய்யவும் பிடிக்காது. அதனால் முதலியார் நிச்சயம் வந்து விட முடியும் என்றே