பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

958 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

றுநாள் மீட்டிங்கிளார்க், மீட்டிங் புது ஸர்குலர் விஷயமாகப் பஞ்சாயத்துக் கமிஷனரை அணுகியபோது, "இந்தாப்பா ஸர்குலர்லே இந்தவாட்டி முதல்லே வேறெதையாவது அஜெண்டா நெம்பர் ஒண்ணுன்னு போடு. ஒருமைப்பாட்டை மட்டும் போட்டுடாதே, என்னாலே மறுபடி மூக்குக் கண்ணாடி வாங்க முடியாது” என்றார் அவர், "சரி சார் இந்தத் தெருக் குப்பைத் தொட்டிகள் வைக்கிற விஷயம் ரொம்ப நாளா அஜெண்டாவிலே சேரலே. அதைப் போட்டுடறேன்” என்று உற்சாகமாக மறுமொழி கூறினார் மீட்டிங் கிளார்க். ஒரு வேளை மறுபடியும் பாதாம் கீர் கிடைக்கலாம் என்ற சந்தோஷம் அவருக்கு வந்திருக்கலாம்.

(1978-க்கு முன்)