பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ! தீமிதி : 657 “கிடக்கான் உதவாக்கரை! சவத்துப் பய பேச்சை விட்டுத் தள்ளுங்க.மேலே ஆக வேண்டியதைப் பார்ப்போம்.” “நாட்டாண்மைக்காரரே! இந்த விவகாரத்தைச் சிறிசா நினைச்சு விட்டிடறதுக்கு இல்லே. பெரிய வம்பு வழக்கெல்லாம் கிளம்பும் போலிருக்கு. ஒரு மண்டலத்துக்கு விரதமிருந்து, ஒரு வேளைச் சோறும் மூணு வேளைக் குளியலுமா எச்சத் தீட்டுக் கலக்காமல்,வீட்டிலே கலக்காமல், நோன்பிருந்து,தீ எறங்கிக் காட்டிக்கிட்டிருக்கோம். இன்னிக்கித் தேதிவரை ஒருத்தன் கால்லே ஒரு கொப்பளம் கிளம்பிச்சுங்கிற பேச்சு உண்டா? நேத்து முளைச்ச பய முளைச்சு மூணெலை விடலே ஒரு நேமம், ஒரு நிஷ்டையில்லாம நானும் தீயிலே எறங்குறேன்னு பேசினா, நல்லாவா இருக்குது?” “நல்லா இல்லைதான்! அதுக்கு நாமென்ன செய்யிறது? பெரிய இடத்துப் புள்ளை. அப்பங்காரன் செல்லமா வளர்க்குறான்.அதிகப்படிச்ச மூஞ்சூறு கழுநிப்பானையிலே விழுந்த கணக்காத் திரியுது புள்ளை.' “வீட்டிலே அடங்காததை நாட்டுலேதான் அடக்கனும்!” “இந்தப் பொடிப்பய குறும்புத்தனத்தைப் பெரிசு பண்ணிச் சச்சரவை உண்டாக்குவானேன்னு பார்க்கிறேன்”. “தவிர இதுலே இன்னொரு தொரட்டும் இருக்குதுங்க. இந்தப் பயலுக பேச்சைக் கேட்டுச் சின்னஞ் சிறுசுக கூடக் கெட்டுப்போகுது.வழக்கமாகத் தீமிதிக்க வருகிற வாலிபப் பிள்ளைங்க ஒண்ணொண்ணா வரமாட்டேன்னு ஒதுங்குதுங்க, பாருங்க. எம்மவனைக் கூப்பிட்டு, ஏலே இந்த அமாவாசிக்குத் தீமிதி வருது. விரதமிருக்கே இல்லே? ன்னு கேட்டேன்.‘என்னப்பா தீமிதி? வருசந் தவறாமே வேலையத்த வேலை’அப்படின்னு அலுத்துக்கிட்டான். இதுமாதிரித்தானே எல்லாம் கெடும்?” “நமக்கென்ன? யாரையும் வெத்தெலை பாக்கு வச்சு அழைக்கவேணாம். பய பக்தியா விரதமிருந்து தானா மிதிக்க வர்றவங்க மட்டும் வந்தாப் போதும்” "அதென்ன பேச்சுப் பேசுறிங்க? ஆத்தமாட்டாத பேச்சு? நாளைக்கு வரமுறை இல்லாமே அந்தப் பசங்களும் தீமிதிச்சுக் காட்டிக் கொப்புளம் படாம வெளி வந்துட்டா, ஊர்லே எந்தப் பயலாவது நம்ம திருவிழாவைக் காற்காசுக்கு மதிப்பானா? கேக்கிறேன். பரம்பரை, பரம்பரையா வந்துக்கிட்டிருக்கிற ஊர் வழக்கத்துக்கு மதிப்பில்லாமேயில்ல போயிரும்? அப்படிப் போக விட்டிடலாமா?” “கொப்புளம் படாமல் அவங்க வெளிவர முடியுமா? அதை யோசிச்சுப் பேசுங்க. காலு வெந்துரணமாயிரும். நாம் ஏதோ துரோபதையாத்தாளை நம்பி தாயே! எல்லாம். நீதான். பூவை மிதிக்கிறாப்பிலே நினைச்சுத் தீயை மிதிக்கிறோம். நீ கொடுத்த காலுக, நெருப்புப் படாமக் காப்பாத்து’ன்னு நேர்ந்துக்கிட்டு, உயிர் உடம்பைத் தெரணமா மதிச்சு அவளை நம்பி, எல்லாத்தையும் அவ பாரம்னு ஒப்படைச்சிட்டுத் தீக்குழிலே காலை வைக்கிறோம்.சூரிய,சந்திரங்க சாட்சியா,இன்னிக்கி வரை ஒருதப்பும் இல்லே. 5T.Lm. II — 3