பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/புகழ்த் துறவு 🞸 979

நடக்காது என்பது இல்லை. அவரே சொல்லிக் கொண்டு பெருமைப்பட்டதுபோல, பூவனை நல்லூரும் ஈசுவரனாகிய வேதநாதனுமே எதிர்த்தாலும்கூட அவரால் அது முடியும். ஆனால், ஶ்ரீமான் வடிவேலுப்பிள்ளை அதற்காக ஒரு சில ‘பச்சை நோட்டுக்களை’ பத்ரிநாத்திடமிருந்து எதிர்பார்த்ததும் அவ்வளவு ‘பெரிய குற்றம்’ என்பதற்கில்லையே! பத்ரிநாத்தும் அதை அப்படிக் குற்றமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. வடிவேலுப்பிள்ளை கொடுத்திருந்த உறுதிமொழியின் பேரிலேயே, டைரக்டரை உடனே அழைத்து வருமாறு டாக்ஸியோடு டிரைவரை அவசரமாகக் கும்பகோணத்திற்கு அனுப்பியிருந்தார் பத்ரிநாத்.

சென்னையிலுள்ள அவர்களது மூவிடோனின் தலைமை டைரக்டர் ஒரு படத்திற்கான புறக்காட்சிகளை எடுப்பதற்காகக் குறிப்பிட்ட சில நடிகர்களோடு கும்பகோணத்தில் ‘கேம்ப்’ போட்டிருந்தார். பத்ரிநாத்தும் அவரோடு வந்திருந்தவர்தான். பூவணைநல்லூர், கும்பகோணத்திலிருந்து,ஏழரை மைலில் உள்ள இயற்கை அழகு வாய்ந்த சிற்றுார். சிற்பங்கள் மிகுந்த வேதநாதப் பெருமான் கோவில் உள்ள இடம். பரம்பரையாக நிருத்திய கலையை வளர்த்துவரும் நட்டுவனார்களும், நடனமணிகளும் நிறைந்த இடம் என்றெல்லாம் கேள்விப்பட்டுச் சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்த ஸ்டுடியோ டாக்ஸியில் தாம் மட்டும் வந்திருந்தார், நடன டைரக்டர் பத்ரிநாத் மறுநாள் எல்லோரும் சென்னை திரும்புவதாக ஏற்பாடு.

மாலை நாலு மணிக்குக்கும்பகோணத்திலிருந்து டாக்ஸியில் புறப்பட்ட பத்ரிநாத் எப்படியும் ஏழு மணிக்குத் திரும்பிவிடுவது என்று திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கே, பூவணை நல்லூரில், தில்லைவடிவு என்ற ஒரு பெண் தம்மை, தம் திட்டத்தை எல்லாம் மாற்றிப் புதிதாக எதை எதையோ நடத்திவிடப் போகிறாள் என்பதைப் புறப்படும்போது அவர் கண்டாரா என்ன?

“எனக்கு இவர் சிநேகிதர்” - என்று சமத்காரமாக ஒரு பொய்யை வீசி எறிந்து, தனக்குத் தில்லை முதலியவர்களை அறிமுகப்படுத்தியதும் ‘நாளைக் காலை நீங்களும் டைரக்டரும் சென்னை செல்லும்போது உங்கள் காரில் தில்லையும் இருப்பாள்’ என்று உறுதி கூறியதுமாகிய வார்த்தைகளைக் கொண்டே, வடிவேலுப்பிள்ளை ஏதோ கொஞ்சம் வெள்ளையப்பனுக்கு அடிபோடுகின்றார் என்பதைப் புரிந்து கொண்டார் பத்ரிநாத். தில்லை கிடைப்பதாக இருந்தால் மூவிடோனின் தலைமை டைரக்டரிடம் சொல்லி எதற்கும் ஏற்பாடு செய்ய முடியும் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இருந்தது.

3

ன்ன அக்கிரமம்? கலி முத்திப் போயிடுத்துண்ணா! முந்தாநாள் தான் ஈசுவரசந்நிதியில் பொட்டுக் கட்டியிருக்கு நேத்துராத்திரி ஊரே பிரமிக்கும்படி, நான் எவ்வளவு அவசரப்படுத்தியும் கேட்காமே, சுவாமி புறப்பாட்டுக்கு முன்னே சுத்திச் சுத்தி ஆடினாள்.இன்னிக்கு அந்தச் சினிமாக்காரனோடே பட்டணம் போறாளாமே? பொட்டுக்கட்டின அப்புறம் அவள் சர்வேஸ்வரனுக்கு உரியவள் இல்லையோ? இந்தப்