பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

982 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

அடையாறு - காந்திநகரில் மூன்றடுக்கு மாடிகளோடு பெரிய விசாலமான பங்களா, இரண்டு மூன்று பாங்குகளில் இலட்சக்கணக்கில் கனத்த ‘பாலன்ஸ்’ துணையாகவோ, பணியாளாகவோ, பீ.ஏ. படித்த ஒர் இளைஞன்! அவனுக்குப் ‘பிரைவேட் ஸெகரெட்டரி’ என்று பெயர்.இந்தப் பதவிப் பெயரைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன் பேர் வழியே என்று, லலிதகுமாரியின் அந்தரங்கக் காரியதரிசி என இப்படிக் கொட்டேஷன் கொடுத்து எழுதி, சில சினிமாப் பத்திரிகைகள் அந்தப் பதவிப் பெயருக்கு ஒரு புது அர்த்தம் கற்பிக்க ஆரம்பித்தன!

“வாழ்வு என்றால் நாலும் கலந்துதான் இருக்கும்” என்பார்கள். ஆனால், அவள் வாழ்விலோ ‘நாற்பதும்’ கலந்திருந்தது என்று கூறிக்கொண்டார்கள்! கலையுலகத்தில் அவளுக்கிருந்த பெருமையும், ‘கிராக்கியும்’ ஏகப்பட்டதாகவே இருந்தது.

5

வீட்டிற்கு இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளும், ஒர் ஆங்கிலப்பத்திரிகையும் தினசரி வந்தாலும், செய்திகளைப் படிக்கவோ, அவற்றை லேசாகப் புரட்டிப் பார்க்கவோ கூட லலிதகுமாரிக்கு நேரமே இருப்பதில்லை. செக்குகளைக் கட்ட பாங்கு செல்லவோ, வருமான வரி அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவோ அவசியமில்லாமல் கொஞ்சம் ஒய்வு ஒழிவு இருக்கின்ற நாட்களில் ரவீந்திரன் (இதுதான் அவளுடைய அந்தரங்கக் காரியதரிசியின் பெயர்) மட்டும் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்ப்பது வழக்கம்.

வழக்கத்திற்கு விரோதமாக, “மிஸ்டர் ரவீ! அந்தத் தமிழ்த் தினப் பத்திரிகைகள் வந்திருந்தால் இங்கே கொண்டு வாருங்கள்! பொழுது போகவில்லை. அதையாவது பார்த்து வைக்கிறேன்” என்று அவள் கூறியபோது, வியப்போடு பத்திரிகைகளைக் கொண்டு வந்து வைத்தான் ரவீந்திரன். அன்று சரஸ்வதி பூஜையாகையினால் ‘ஸ்டுடியோக்கள்’ எல்லாவற்றிற்கும் விடுமுறை என்பது அவனுக்கு அப்போது தான் நினைவு வந்தது.

பத்திரிகையை மேலோட்டமாகப் பார்த்துக்கொண்டே வந்த லலித குமாரி, அடுத்தடுத்த தலைப்புக்களாக ஒரே பக்கத்தில் பிரசுரமாகி இருந்த அந்தச் செய்திகளைக் கண்டதும் தன் பார்வையை அப்படியே அதன்மேல் நிலைக்க விட்டுவிட்டாள்.

‘கும்பகோணம் நடன ஆசிரியரின் பரிதாபகரமான முடிவு’ ‘கோவிலில் தர்மகர்த்தா பதவியிலிருந்து விலக்கப்பட்டார்’. தனித்தனியே மேற்கண்ட இரு தலைப்புக்களுடனும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

“கும்பகோணம் - இவ்வூருக்கு அருகிலுள்ள பூவணைநல்லூர்க் கோவில் தர்மகர்த்தா வடிவேலுப்பிள்ளை, வேதநாத சுவாமி கோவில் தோட்டத்தில் ரகசியமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த மொட்டைக் கடிதம் ஒன்றைப் பரீட்சிப்பதற்காகப் போலீஸ் அதிகாரிகள் திடீரென்று பூவணைநல்லூருக்கு விஜயம் செய்து பிரஸ்தாப இடத்திலே பரீட்சித்தபோது,மொட்டைக் கடிதம் உண்மை என்றே முடிவாயிற்று. மேலும் புலன் விசாரித்ததில் கும்பகோணத்தில் பிரபல நடன ஆசிரியராக இருக்கும் பூவணைநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும்