பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/புகழ்த் துறவு 🞸 983

திருட்டுச் சாராயம் காய்ச்சுவதில் வடிவேலுப் பிள்ளைக்குத் துணையாக இருந்து வந்திருக்கிறார் என்று தெரியவந்தது.

ஆனால், பூவணைநல்லூரில் போலீஸார் சென்று பரிசோதித்த அதே இரவில், கும்பகோணம் மகாமகக் குளத்தின் அருகே நடன ஆசிரியர் முத்துக்குமார் யாராலோ பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். முத்துக்குமாரின் கொலை செய்யப்பட்ட பிரேதத்தைக் கும்பகோணம் போலீஸ் டாக்டர் பரிசோதித்து, கொலை செய்யப்படுவதற்கு முன் முத்துக்குமார் நிறையக் குடித்திருக்க வேண்டுமென்று தெரிவித்தார். பூவணைநல்லூர்க் கள்ளச் சாராய வழக்கிற்கும், முத்துக்குமார் கும்பகோணத்தில் கொலை செய்யப்பட்டதற்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று போலீஸார் கருதுகின்றனர். வடிவேலுப்பிள்ளை என்பவர் பூவணைநல்லூர்க் கோவில் தர்மகர்த்தா பதவியிலிருந்து விலக்கப்பெற்று, கும்பகோணம் சப்ஜெயிலில் போலீஸ் ரிமாண்டில் இருந்துவருகிறார்”. லலிதகுமாரி பத்திரிகையை அப்படியே படித்துக் கீழே எறிந்தாள்.அவள் மனத்தில் நினைவிலிருந்து எழுந்த ஒரு பழக்கமான கவிச்சித்திரம் தோன்றியது.

"நின்றும் நிலைத்தும் நிலமார
நெடும் புகழ்தான் நிதம் பெற்றுங்
குன்றின் விளக்கென்னவே வாழ்மாந்தர்
குலவுமுறை விதியணுகத்
தின்றும் திளைத்தும் சிறியனவே
செய்துமிக இழிவணுகக்
கொன்றும் குலைத்தும் வேதேசா!
குவிந்தபுகழ் துறந்திடுவர்
துன்றும் துவடியாம் நின்னடியைத்
தொடல் மறந்த தொல்லை ஐயோ!"

பூவணைநல்லூர் வேதநாதப்பெருமான் மீது குமரேசப் பாவலர் பாடிய இந்தப் பாட்டிற்கு இளமையில் ‘தில்லைவடி’வாக, இருந்தபோது எத்தனையோ முறை அபிநயம் பிடித்து ஆடியிருக்கும் நினைவு ‘லலிதகுமாரிக்கு’ ஏற்பட்டது. அவள் கண்களில் காரணமின்றிக் கண்ணிர்துளித்தது.நெஞ்சில் ஏதோ ஒர் உருக்கம் வேகமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தது. வடிவேலுப்பிள்ளை காலத்தில் தனக்கு ‘மிகவும் பிடித்த பாட்டு இது’ என்ற அவர், கோவிற் சுவரில் இதை எழுதி வைத்ததையும், "தில்லை! நீ இந்தப் பாட்டைப் பாடி அபிநயமும் பிடித்துவிட்டால் எனக்கு அழுகையே வந்துவிடுகிறது, அம்மா!” என்று வாயாரப் பன்முறை நட்டுவனார் கூறியதும் லலிதகுமாரிக்கு நினைவு வந்தன. இந்தப் பாடலை அவ்வளவு தூரம் உணர்ந்த வடிவேலுப்பிள்ளையும் முத்துக்குமார நட்டுவனாருமே இப்படி ஆகிவிட்டார்களே? இது விதியா? அல்லது வேதநாதனுடைய திருவிளையாடலா? நம்மை இப்படி யெல்லாம் ஆக்கக்கூடிய புகழை, அது நம்மை இக்கோலங் காண்பதற்குள் நாமாகவே