பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

984 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

துறந்து தியாகம் செய்துவிட்டால்? புகழும் பவிஷ-ம் நம்மை விலகுவதற்குள் நாமாக அவைகளை விலக்கி ‘அவன்’ அடிப்பணி பூண்டால் தொல்லை இல்லையா . லலிதகுமாரி (பழைய தில்லை வடிவு) மனங் குழப்பும்படி சிந்தித்தாள். சிலையாக உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தாள்.

6

ரஸ்வதி பூஜைக்கு மறுநாளைக்கு மறுநாள். பூவணைநல்லூர்க் கோவில் சந்நிதி வாசலில் யாரோஒர் இளம்பெண் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.அவள் தூய வெள்ளை உடை அணிந்திருந்தாள். வாரி முடித்த கருங்குழல்; உடலில் வேறு எந்த அணிகலனும் அலங்காரமும் கிடையாது.

பூட்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறோமே என்பதையும் மறந்து யாரோ ஒரு நகரத்து மனிதன் காரிலிருந்து இறங்கி நேரே சந்நிதி வாசலுக்கு வேகத்தோடு நடந்துவந்தான். “லலிதா! உன் முடிவு இதுதானா? வாழ்வின் பெரும் பகுதியை வீணாகவே கழித்துவிட உனக்கு அவ்வளவு திடமான விரக்தி என்ன வந்தது? நீயாகப் புகழை வேண்டி அன்று இதே கோவிலிலிருந்து யார் சொல்லியும் கேட்காமல் என் வேண்டுகோளுக்கு இணங்கிச் சென்னைக்கு வந்தாய்! இன்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்து இங்கே கல் தரையில் கைதேயக் கோலம் போடுகிறாய்! புகழைச் சுலபமாக அடையமுடியாது லலிதா துறந்துவிடலாம் சுலபமாக”

கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண், கோலப் பொடியினாலேயே சந்நிதிக்கு முன் ஏதோ எழுத்துக்களைத் துவினாள்.

"கொன்றும் குலைத்தும் வேதேசா!
குவிந்தபுகழ் துறந்திடுவர்
துன்றும் துவடியாம் நின்னடியைத்
தொடல் மறந்த தொல்லை ஐயோ!"

"மிஸ்டர் பத்ரிநாத்! வடிவேலுப் பிள்ளையையும், நட்டுவனாரையும் போல என்னையும் ஒரு நாள் என் புகழ் சந்தி சிரிக்கச் செய்துவிடும். நானே முந்திக்கொண்டு வந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் தலை நிமிர்ந்து கூறினாள். வந்தவர் பதில் பேசாமல் வந்த வழியே திரும்பி நடந்தார்!

(1978-க்கு முன்)