பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/நினைத்ததும் நடந்ததும் 🞸 991

அவனை நோக்கிக் குடை சாய்ந்து கொண்டிருந்தது. சட்டைப் பையிலிருந்து பிதுங்கி வெளியே தெரிந்தது அவன் எழுதிய தந்தி பாரம் தான் சுமந்திருக்கும் செய்திகளை உண்மையாக்கிய மகிழ்ச்சியில் அவனைப் பார்த்து நகைப்பது போலிருந்தது அதன் தோற்றம்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிய ரகுநாதனின் நண்பன் தந்தி பாரத்துடன் அதே போஸ்டாபீஸை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அந்தப் பாரத்தில் எழுதிய செய்திகள் ரகுநாதன் ஏற்கனவே எழுதியபடி எழுத்துக்கு எழுத்து வித்தியாசமின்றி அமைந்திருந்தன. சோமநாத சர்மாவுக்கோ சரோஜாவுக்கோ இதுவரை விஷயம் தெரியாது. தந்தியை முன் அனுப்பிவிட்டு நேரில் ஆறுதல் அளிக்க அடுத்த வண்டியில் கீழத் தேருக்குப் புறப்பட்டான் ரகுவின் நண்பன்.

(1978-க்கு முன்)