பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/மல்லிகையும் மரிக்கொழுந்தும் 🞸 993

ரோஜாப் பூவை அத்தராக மாற்றி நுகரும்போது மனத்தை வரம்பு கடந்த போதைக்கு ஆளாக்கி விடுகிறதல்லவா? படித்த பெண்களின் காதலும், காதலுக்குப் பின்னுள்ள வாழ்வும் அத்தகையதுதான் போலும்” இந்தத் தத்துவ உணர்ச்சி அவனுக்கு இன்று ஏற்படுகின்றது.

அன்று காலேஜில் படித்தபோது மாலை நேரத்தில் எத்தனையோ நாட்கள் அவன் ஜானகியோடு அதே காவேரிக் கரைக்கு வந்திருக்கிறான்.அப்போது அவள் உள்ளத்தில் மலரின் மென்மையும் அன்பு மணமும் இருப்பது கண்டு அவன் வண்டானான். பால் பொழியும் எண்ணற்ற வெண்ணிலாக்கள் அவர்களை அந்த மணல் வெளியில் எத்தனை எத்தனையோ காதல் பேச்சுக்களைப் பேசச் செய்திருக்கின்றன. சலசலவென்று ஒடும் தண்ணிரின் ஜலதரங்க நாதத்தோடு அவர்களுடைய அளவற்ற ஜோடிச் சிரிப்பொலிகளையும்.கேட்டு மகிழ்ந்த இரவுகளும் பல. இப்போதோ, அவை யாவும் வெறும் கனவுகளாயின.

சிந்தனையிலிருந்து விடுபட்ட ரங்கநாதன், நன்றாக விடிந்து விட்டதைக் கண்டு அவசர அவசரமாகக் குளித்து விட்டுப் புறப்பட்டான்.அரையிலும் தோளிலும் இருந்த ஈரத் துணிகள் குளிரின் மிகுதியால் உடலை ‘வெடவெட’ என்று நடுக்க, வடக்கு அடையவளைந்தானை நோக்கி நடந்தான் அவன். சரியாக மணி பத்துக்கு அவன் காலேஜில் இருக்க வேண்டும். அதற்குள் அடுப்புடனே போராடிச் சமையலை முடித்துச் சாப்பிட அன்று நேரம் காணாதுபோல இருந்தது.காலேஜுக்குக் கொஞ்சம் நேரம் தாமதித்துச் சென்றால் அந்த பிரின்ஸிபால் முகத்தைப் பொறித்த அப்பளம் மாதிரிக் கடுகடு என்று வைத்துக்கொண்டு ‘புரொபஸர்களுடைய ஸ்டாஃப் ரூம் வாசலில் தயாராக வந்து நின்று கொண்டிருப்பார். இரண்டொரு நாள் தீராத குறையாக அவன் தாமதித்துச் சென்ற குற்றத்திற்காக, முதல் ‘பீரியடு’ ‘லீஷராக’ இருந்த அவன் டயம்டேபிளை மாற்றி முதல் பீரியடில் சீனியர் இண்டர் பொயடரி வகுப்பை அவன் தலையில் ஏற்கெனவே சுமத்தியிருந்தார் அவர் ஒன்பதே முக்காலுக்குள் காரியங்களை எல்லாம் முடித்துக்கொண்டு அவன் பஸ் ஸ்டாப்பிற்கு ஓடினால் சில சமயங்களில் பஸ்ஸில் இடம் பிடிப்பதற்குள்ளே தாமதம் ஆகிவிடுகிறது. அன்று தன் ஏகாங்கியான வாழ்க்கையின் நிலையைப் பற்றியும், ஜானகி தன்னை இந்தக் கதிக்கு உள்ளாக்கிச் சென்றதையும் பற்றிய எண்ணங்களினால் பீடிக்கப்பட்டுக் காவேரிக் கரையில் வழக்கத்தை விட அதிக நேரம் தங்கிவிட்டான் அவன்.

2

டுப்பிலே சமையலுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அன்று நடத்த வேண்டிய லெக்சர்களுக்கு முன்னோட்டமாக ஒருமுறை புஸ்தகங்களைப் புரட்டினான், முதன் முதலாக அவன் கையெடுத்துப் பார்த்த பக்கத்திலேயே, “வாழ்க்கை என்பது இரண்டு கரைகளுக்கு அடங்கி ஒடும் ஒர் ஆறாக இருந்தால் வெள்ளமில்லாத காலத்தில் அதிலுள்ள மேடுபள்ளங்களை முன்பே அறிந்து கொள்ளலாம்; வெள்ளம் வருவதற்கு முன்பும் அறிகுறிகள் தெரியும். ஆனால், வாழ்க்கை கரைகளற்ற அலை பாயும் ஆழ் கடலாக அல்லவா இருக்கிறது? நீர் வற்றவோ, குறையவோ செய்யாத

நா.பா. 11 - 24