பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/மல்லிகையும் மரிக்கொழுந்தும் 🞸 995

உருவாகிய நாதக் கட்டு மிக்க வெண்கல மணியாக இருந்தது அன்றைய வாழ்க்கை இன்றோ? அதன் ஒரு பகுதி கீறிப் பிளவுபட்டுவிட்டது.இப்போது அதில் பழைய நாதலாவண்யம் இல்லை. அடித்தால் நாராசம்போலக் கடுமையாக ஒலிக்கிறது. வாழ்க்கையின் நாதத்தில் லயசுகம் கெட்டுப்போகும்படி செய்துவிட்ட அந்தச் சம்பவம் கோடை விடுமுறை முடியும் தருணத்தில் நடந்தது. தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவள் அப்படி ஏற்பாடு செய்து கொண்டதைக் கூட அவன் பொறுத்து மன்னிக்கத் தயாராக இருந்தான். ரங்கநாதன், காதலைக் கவிகளின் காவியத்தில் படித்தது போலவே தன் வாழ்க்கையிலும் நம்பி எதிர்பார்த்தது அவனுடைய முழுப் பெருங்குற்றம் என்பதை நிரூபித்துவிட்டாள் ஜானகி. சகுந்தலையும் துஷ்யந்தனும், சாருதத்தனும் வசந்த சேனையும், ரோமியோவும் ஜூலியட்டுமாக, ரங்கநாதனையும் ஜானகியையும் எதிர்காலத்தில் அவன் எண்ணிப் பார்த்து மயங்கிவிட்டது அவளுடைய குற்றமில்லை; தன் குற்றம்தான் என்பதை ரங்கநாதன் புரிந்து கொண்டான். அதை அவனுக்குப் புரிய வைத்த நிகழ்ச்சி!...

3

கோடை விடுமுறை முடிவதற்கு இன்னும் பதினைந்துநாட்களே சரியாக இருந்தன. ‘குற்றாலத்தில் நல்ல ‘சீஸன்’ ஆரம்பமாகியிருக்கிறது’ என்று அன்றைய காலைப் பத்திரிகையில் தான் படித்ததைச் சாப்பிடும்போது ஜானகியிடம் ரங்கநாதன் மகிழ்ச்சியோடு கூறினான். ‘குற்றாலம்’ என்று கூறினவுடனே வழக்கமாக அவள் காட்டும் ஆவலுக்கு மாறாக அன்று அசுவாரஸ்யமான மெளனத்துடன் இருந்துவிட்டாள்.இரண்டோர் நாட்களாகவே ஜானகி தன்னோடு அதிகம் பேசாமல் இருப்பதையும், ஏதோ பறிகொடுக்கமுடியாத பறிகொடுக்கக் கூடாத ஒன்றைத் தான் பறிகொடுத்து விட்டதைப்போல அடிக்கடி ஏங்கிப் பெருமூச்சு விடுவதையும் அவன் கண்டிருந்தான். அவள் சாதாரணமாகத் தன் மனைவி என்ற அளவிற்கு மட்டும் ரங்கநாதன் அவளைக் குறைவான மதிப்பீடு செய்ததில்லை.“பி.ஏ.வரை படித்த பெண், தன் ஆருயிர்க் காதலி” - என்ற பெருமிதத்தை அவள் வரையில் அவன் கொண்டிருந்ததனால் “இரண்டோர் நாளாக அவள் இப்படி இருப்பதற்குக் காரணம் என்ன?” - என்று வெளிப்படையாக அவளை வாய்விட்டுக் கேட்க விரும்பவில்லை. குற்றாலத்திற்குப் புறப்படும் ஆவலைச் சொல்லியாவது அவளது இந்தப் புதிர் நிலையை விடுவிக்க முயன்றுவிடலாம் என்று அவன் முடிவு செய்திருந்ததும் ஏமாற்றத்தையே அளித்தது. அவள் அதே ஏக்கமும் மெளனமும் திகழவே இருந்தாள். ரங்கநாதன் திகைத்தான். ‘துயரம் படிந்துள்ள அவள் நிலையின் காரணம் என்ன சூட்சுமத்தை உண்டுபண்ணி விடமுடியும்?’ அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.“தனக்கு அன்புடையவர்களை நெஞ்சு கலங்கவைக்கும் சக்தி மெளனத்திற்கு எவ்வளவு துரம் இருக்கின்றது” என்று சிந்தித்து ஏதும் தெளிவாகாமல் மயங்கினான் ரங்கநாதன். சாப்பாடுமுடிந்ததும்,விடுமுறையானாலும் காலேஜ் வரை சென்று வரவேண்டிய காரியம் அன்று அவனுக்கு இருந்தது.டிரெஸ் செய்துகொண்டு காலேஜுக்குப் புறப்பட வாசற்படியில் காலை வைத்த ரங்கநாதன் எதிரே தபால்காரன் கவருடன் வருவதைக்