பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

996 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

கண்டு அப்படியே நின்றுகொண்டான்.ஜானகியின் பேருக்கு வந்திருந்த அந்தக் கவரை வாங்கி உறையைக் கவனித்தபோது அது அவனுடைய வியப்பை மேலும் வளரச் செய்தது. பெண்கள் கல்லூரி ஒன்றின் பிரின்ஸிபாலிடமிருந்து வந்திருந்தது அந்தத் கவர். அதை அங்கேயே உடைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அடக்க முடியாமல் எழுந்தும்கூடச் சட்டைப் பையிலே வைத்துக்கொண்டு காலேஜுக்குப் புறப்பட்டுவிட்டான் அவன்.

‘ஜானகியின் அந்த ஏக்கங் கலந்த மெளனப் புதிரை விடுவிக்கும் உண்மை ஏதாயினும் இந்தக் கவ்ரில் இருக்காதா?’ என்ற ஆவலோடு தான் ரங்கநாதன் அந்தக் கவரைக் கையோடுகொண்டுபோனான்.வேறு தவறான நோக்கம் எதுவும் அவனுக்குக் கிடையாது. பின்னால் அவள் அதையும் ஒரு குற்றச்சாட்டாக அவன் மேல் சாட்டியபோதுதானே அதை அவன் தெரிந்துகொள்ள முடிந்தது?

காலேஜுக்கு வந்த காரியம் பிரின்ஸ்பாலைச் சந்தித்த சற்று நேரத்திற்கெல்லாம் முடிந்துவிட்டது. வந்த காரியம் முடிந்ததும் அங்கேயே தனியாக ஓரிடத்தில் அமர்ந்து ஜானகிக்கு வந்திருந்த அந்தக் கவரை ரங்கநாதன் உடைத்தான். ஏதோ ஒரு பெரிய மறைந்த உண்மையைப் புரிய வைத்துக்கொள்ள முயலும் ஆராய்ச்சியாளனை ஒத்திருந்தது துடிதுடிக்கும் அவன் மனநிலை.

கவருக்குள் இருந்தது அவன் எதிர்பார்த்தபடியே, மிகவும் வியப்பிற்குரிய செய்திதான். அவன் கனவில்கூட எதிர்பார்த்திராதது அது! ‘அப்ளிகேஷன்’ கூட அவனைக் கேட்காமலே போட்டு விட்டாள். அவளுடைய அப்ளிகேஷனை ஏற்றுக் கொண்டு லெக்சரராக ஆர்டர் அனுப்பியிருந்தாள் பிரின்ஸிபால் அம்மாள். ஒரு வாரத்திற்கு முன் மாலையில் சாவகாசமாக அன்றைய ஹிந்து பத்திரிகையைப் புரட்டினபோது ‘எஜுகேஷனல் வாண்டட்’ காலத்தில் ஒரு சிறு பகுதி கத்திரிக்கப்பட்டிருந்ததன் காரணம் இப்போது ரங்கநாதனுக்கு நினைவு வந்தது.

‘எனக்குச் சிறிதும் அறிவியாமல் அவள் இவ்வளவு பெரிய காரியத்தை ரகஸ்யமாகச் செய்வானேன்? ஜானகி லெக்சரராகிச் சம்பாதிக்க வேண்டும் என்று என்ன குறை இப்போது நமக்கு வந்துவிட்டது? தனக்கு இப்படிப்பட்ட நோக்கம் இருக்கிறது என்பதனை இது நாள் வரை குறிப்பாகக் கூட அவள் என்னிடம் சொன்னதில்லையே? பி.ஏ. பட்டம் பெற்றபின் இரண்டரை வருடங்களாக இல்லாத ஆசை இப்போது திடுதிப்பென்று இவளுக்கு எப்படி வந்தது? அப்படித்தான் இவள் லெக்சரராகி எந்தப் பெரிய காரியத்தைச் சாதித்துவிடப் போகிறாளாம்? என்னிடம் கூட மறைக்கும் படியான உண்மைகள் இவள் உள்ளத்தில் நிறைந்திருக்கின்றனவே? வரட்டும். வீட்டிற்குப் போய்க் கேலி செய்யலாம்.’

வியப்போடு சிரித்துக்கொண்டே ஆர்டரைக் கவருக்குள் செருகிப் பையில் வைத்துக்கொண்டு எழுந்தான் ரங்கநாதன்.ஜானகியின் இந்த மெளன வேதனையோடு கூடிய துயர நாடகத்திற்கு இந்த ஆர்டர் ஒன்று மட்டும் முழுக் காரணமாக இருக்க முடியாது. அதன் காரணங்களில் வேண்டுமானால் முக்கியமான ஒன்றாக இதுவும் இருக்கலாம்.ஆனால், இதைத் தவிர வேறு சிலவும் உண்மைதான். இவ்வாறு எண்ணிக்