பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/மல்லிகையும் மரிக்கொழுந்தும் 🞸 997

கொண்டே பிரின்ஸிபாலிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான் ரங்கநாதன்.

4

ங்கநாதன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது பகல் ஒரு மணி ஆகியிருந்தது. ஜானகி அவனுடைய அறையிலேயே நாற்காலியில் அமர்ந்து ஒரு புஸ்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பில் மிகுதியான சுவாரஸ்யத்தோடு ஈடுபட்டிருந்த அவள் அவன் வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை. வேண்டுமென்றே கவனமின்றி இருக்கின்றாளோ என்று எண்ணினான்ரங்கநாதன்.அன்று வெள்ளிக்கிழமை. அவள் எண்ணெய் தேய்த்துக் குளித்திருந்ததனால் ஈரக் கூந்தல் மேகக் கூட்டம் போல நாற்காலியின் பின்புறம் அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. வைரத்தோடு, மூக்குத்திகளைக் கழற்றியிருந்தும் பெளர்ணமிச் சந்திரன்போல் விளங்கும் அவள் முகத்தில் அமைதி நிறைந்த ஒருவித அழகை ரங்கநாதன் கண்டான். புஸ்தகத்தையே இமையாமல் நோக்கிக் கொண்டிருக்கும் அந்த ஒரு ஜோடிமலர் விழிகள் கூட இன்று அவனுக்குப் பழைய காவியமொன்றின் புதிய பொருள் நயம் போலக் காட்சி அளித்தன.

கனைத்துக்கொண்டே புன்னகை தவழஅறைக்குள் நுழைந்தரங்கநாதனைத் தலை நிமிர்ந்து பார்க்காவிட்டாலும் ஜானகி பரபரப்போடு எதையோ மறைக்க முயலுபவளைப் போலப் புஸ்தகத்தை மூடினாள். அவள் மூடின வேகத்தில் புஸ்தகத்தில் இருந்து பறந்து வந்த அந்தத் துண்டுக் காகிதம் சொல்லிவைத்தாற்போல ரங்கநாதன் காலருகே வந்து விழுந்தது. அவன் குனிந்து எடுக்க யத்தனிப்பதற்குள் ஜானகி விருட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து அதைக் கையில் எடுத்துக் கொண்டாள். எடுத்ததை மீண்டும் புஸ்தகத்திற்குள்ளேயே வைத்துக் கொண்டு அவள் அறையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டாள். காகிதத்தை எடுத்துப் பார்க்க முடியாவிட்டாலும், அது ‘அந்த ஹிந்துப் பத்திரிகை’ விளம்பரக் ‘கட்டிங்’ என்பதும் அதன் ஒரத்தில் தான் அப்ளிகேஷன் அனுப்பிய தேதியை ஜானகி குறித்திருந்ததையும் ரங்கநாதன் கண்டு கொண்டான்.

அறையை விட்டு வெளியே சென்ற ஜானகியைப் பின்பற்றி அவனும் சமையலறைக்குச் சென்றான்.பையிலிருந்து கவரை வெளியே எடுத்துக் கொண்டு, ஒரு விஷமச் சிரிப்புடனே, “ஏதேது! காலேஜ் ‘லெக்சரர்’ ஆவதற்கு ஏற்பாடுகள் எல்லாம் பிரமாதமாக நடக்கிறது போலிருக்கிறதே? ஆமாம். இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு அடியேனுக்கு உரிமை கிடையாதோ?” என்று கூறியவாறே கவரை அவளிடம் நீட்டினான். அவள், தனக்குத் தெரியாமல் வேலைக்கு மனுச் செய்தது, தன்னிடம் பாராமுகமாக நடந்து கொள்வது, இதையெல்லாம் எண்ணி வருந்துவது ஒரு புறம் இருந்தாலும், மகிழ்ச்சியுடனேயே அவன் அதை அவளிடம் கொடுத்தான். அவளுக்கு காலேஜ் ‘லெக்சரராவதில்’ ஆர்வம் இருக்கும் பட்சத்திலே அதைத் தடுக்க வேண்டும் என்று அவன் நினைத்தது கூட இல்லை.

ஆனால், கவரை வாங்கிக்கொள்ளும்போது எரித்துவிடுவதுபோல அவனை அவள் பார்த்த அந்தச் சினங்கவிந்த பார்வையும், “எம்.ஏ.படித்துக் காலேஜில்