பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

998 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

புரொபஸராக இருக்கும் ஒருவருக்கு மற்றவர் கடிதத்தை வாங்கிச் செல்லும் அளவிற்கு உரிமை இருக்கும்போது.இது இருக்கக்கூடாதா என்ன?“”” என்று மூன்றாம் மனிதரிடம் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவதுபோல வெடுக்கென்று அவள் பேசிய வார்த்தைகளும் அவன் ஆத்திரத்தைச் சட்டென்று தூண்டி விட்டன. ஆயினும் அவன் தன்னை அடக்கிகொண்டான்.

படித்த பெண்களைப் பற்றிய இரண்டு நிலையான உண்மைகளை ரங்கநாதன் நன்கு அறிந்திருந்தான், ‘அந்த உண்மையில் ஒன்று நிகழவேண்டிய சந்தர்ப்பம் அப்போது தன் வாழ்விலும் வந்து கொண்டிருக்கிறதோ?’ என்று எண்ணிப் பார்க்கும்போது அந்த எண்ணமே கசப்பு நிறைந்த உணர்வை அவனிடம் உண்டாக்கியது. “வாழ்க்கையில் ஈடுபட விரும்பாமல் படிப்பின் வழியிலே துடிதுடிப்போடு முன்னேறும் படித்த பெண் என்றாவது ஒரு நாள் திடீரென்று எதிர்பாராத் விதமாக வாழ்க்கையில் வந்து விழுந்துவிடுகிறாள். படிப்பில் தேர்ச்சி பெற்றும் வாழ்வில் ஈடுபட்ட படித்த பெண், என்றாவது அதிலிருந்து சலிப்புக் கொண்டு விலகி விடுகிறாள்.” - இந்தப் பயங்கர உண்மை ஜானகியின் விஷயத்தில் உண்மையாகவே முடியும் என அன்றைக்கு அவன் நம்பியிருக்கவில்லை. வெறுமனே சந்தேகித்தான் அவ்வளவுதான். ஆனால் இன்றோ?...

அன்று மாலை ஜானகிக்குத் தெரியாமல் அவள் கையிலிருந்து புஸ்தகத்தை எடுத்துப் புரட்டிய ரங்கநாதன் அவளுடைய மெளன ஏக்கத்திற்கும் அந்தப் பெருமூச்சிற்கும் மறைமுகமான இந்த முயற்சிகளுக்கும் என்ன காரணம் என்பதனைப் புரிந்துகொண்டான்."படித்த பெண்களும் சமூகமும்” என்ற பெயரையுடைய அந்தப் புஸ்தகத்தில் அவள் அடையாளம் செய்திருந்த பகுதிகள் அவளது அப்போதைய நெஞ்சத்தைத் திறந்து அவனுக்குத் தெளிவாகக் காட்டிவிட்டன.

"படித்த பெண்கள் இன்றைய சமூகத்தில், சாறு பிழிந்த கருப்பஞ் சக்கையைப் டோலப் பயன்பட்டுத் தங்கள் படிப்பை வீணாக்கி விடுகிறார்கள். காதல் என்பது எத்தனையோ படித்த பெண்களைக் கவர்ந்துவிடுகிறது. அது வெறும் கவர்ச்சி வலை என்பதை அறிந்துகொள்ள முடியாமல் அகப்பட்டுக்கொண்டு வாழ்வை வீணாக்கி விடுவது பல படித்த பெண்களுக்குப் பெரும்பாலும் ஒரு வழக்கமாகிவிட்டது.

“ஒவ்வொரு படித்த பெண்ணும் தன் போன்ற படித்த பெண்களின் சமூகத்தை வளர்க்கும் பணியில் தன்னைப் பங்கு கொள்ளச் செய்யவேண்டும். படித்த பெண் காட்டுப் பூவாக யாரும் காணாமல் நுகராமல் வாழ்விலோ, காதல் வலையிலோ சிக்கி அழிந்துவிடக்கூடாது. அவள் சமூகக் கோவிலின் கோபுர விளக்காகக் குன்றாத ஜோதியுடன் விளங்கவேண்டும்.”

இப்படி எத்தனையோ பகுதிகளை அடையாளமிட்டு வைத்திருந்தாள் ஜானகி. ரங்கநாதனே அந்த வாக்கியங்களைப் படிக்கும்போது அதுவிளைவிக்கும் உருக்கம் மிகுந்த உணர்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், ஒருபெண் அதுவும் படித்த அதே அனுபவத்திற்கு ஆளான பெண், அந்த உருக்கத்தில் எவ்வளவு தூரம் ஆழ்ந்து