பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/மல்லிகையும் மரிக்கொழுந்தும் 🞸 999

தோய்ந்து போயிப்பாள்? அவளை அந்த நிலையில் வைத்து ஆழமாகச் சிந்தித்து அவளுடைய மனம் செல்லும் வழியை ஓரளவு ஊகித்துக்கொள்ள ரங்கநாதனால் முடிந்தது. அவள் அவனிடமே விண்டு சொல்லியிருந்தால் உள்ளுர்ப் பெண்கள் காலேஜ் ஒன்றில் ஏற்பாடு செய்து மகிழ்வித்திருப்பான். அவளைப் பிரைவேட்டாக ‘எம்.ஏ’.க்குத் தயார் செய்ய வேண்டுமென்று வெகுநாளாக அவனுக்கே இருந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளத் தொடங்கியிருப்பான். அப்படியெல்லாம் சொல்லாமல் மறைமுகமாக அவள் செய்து வந்த இம்முயற்சிகளினால், ‘எதிர்பாராமல் அன்பு பொண்டு இணைந்ததைப் போலவே இன்றும் எதிர்பாராமலே அவள் தன்னிடமிருந்து அணுஅனுவாக விலகிக் கொண்டிருப்பது’ அவன் உணர்வில் மலர்ந்து தெரிந்தது.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த அன்றிலிருந்து தகராறுகள் வாக்குவாதங்கள் அவர்களுக்குள் சர்வ சாதாரணமாயின. ரங்கநாதன் அவள் நன்மைக்காக என்று எண்ணிச் சொன்னவைகளை எல்லாம் சூழ்ச்சி என்று எண்ணிக்கொண்டாள் ஜானகி. ஜானகி தன்னை அளவுமீறி வெறுப்பது போன்ற ஒரு பொய்யுணர்வைத் தனக்குள் வளர்த்துத் தழும்பேறவிட்டுவிட்டரங்கநாதனும் சில சமயங்களில் பழைய அன்பையும் பொறுமையும் மீறி ஏதாவது ஆத்திரத்தோடுசொல்லிவிடுவது சகஜமாகிவிட்டது.ஒரு சாதாரணப் புத்தகத்திலுள்ள அச்செழுத்துக்களை நம்பி ஜானகி வழி விலகுவதை அவன் மறைமுகமாக எதிர்ப்பது அவனுடைய வார்த்தைகளாலேயே புலப்பட்டு விட்டது. அவன் தன்னை வேண்டுமென்றே அடக்கி ஒடுக்குவதாக எண்ணிக் கொண்ட அவள் தன் பிடிவாதத்தைப் பெருக்கிக் கொண்டே போனாள்.

இறுதியில் ஒரு நாள் அவன் எதிர்பார்த்த அதுவே நடந்துவிட்டது "என்னைக் கொஞ்ச நாள் என் போக்கில் விடுங்கள்! என்றைக்காவது நம்முடைய இரண்டு மனங்களும் பழையபடி ஒன்றுபட்டால் நாமும் ஒன்று படுவோம். அதுவரை நான் இந்தக் காலேஜ் வேலையை ஏற்றுக்கொண்டு சமூகப் பணி செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு அவள் அந்த லெக்சரர் வேலையை ஒப்புக்கொள்ளப் புறப்பட்டு விட்டாள். விளையாட்டுப் போல எல்லாம் கனவேகமாக நடந்துவிட்டது. அவளைத் தடுத்து நிறுத்தவோ, எதிர்த்து அடக்கவோ அப்போது ரங்கநாதனால் முடியவில்லை. அவளை அவள் சொன்ன மாதிரி விட்டுவிட்டான். உள்ளூரிலேயே தாய் தந்தையர் இருந்தும் ஜானகியைக் காதல் மணம் செய்துகொண்ட குற்றத்தால் வளர்ந்திருந்த பகை அவனுக்கும் அவர்களுக்கும் இடையே இருந்தது. ஏகாந்த வாழ்க்கை ரங்கநாதனுடைய தலையில் விழுந்தது. விரக்தியோடு அவன் அதை மேற்கொண்டான்.

"படித்த பெண்களின் முதற் காதல், மணமும் கவர்ச்சியும் வெள்ளை நிறமும் உடையதாகிய மல்லிகைப் பூப்போலச் சிறந்ததாக இருந்தாலும், அது ஒரு முறை மலர்ந்தால் அதன்பின் விரைவில் வாடி உதிர்ந்து போகக் கூடியதே. அதன் அழகு, மலர்ச்சி, மணம், வண்ணம் முதலிய யாவும் சாசுவதமானவைகள் அல்ல. குறுகியகால எல்லைக்குள் அழிந்து போகக்கூடியவை. ஆனால்,பெற்றோர்கள் கூட்டிவைத்த காதல் தம்பதிகளோ வாழ்க்கை முழுவதும்கூட ஒன்றுபட்டிருக்கிறார்கள். மருக்கொழுந்துச்