பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1006 *

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

எடுத்துக் கொண்டு தங்கியிருக்கிறேன். எங்கே சண்பக அருவிக்கா? நான் அங்கிருந்துதான் வருகிறேன்.”

"ஆனால் என்ன? இன்னொரு தரம் போகலாமே" - என்றார் வேங்கடரத்னம் மூவரும் மேலே நடந்தனர். மூன்றாவது நபரின் குறுக்கீட்டால் வாட்ச்மேனின் கதை இதற்குமேல் தொடர முகாந்திரமில்லாமல் போயிற்று.

4

ன்று பெளர்ணமி, சிவலிங்கத்தின் மேல் பால் அபிஷேகம் செய்கிற மாதிரி மலைச்சிகரங்களின் மேல் நிலவுக் கதிர்கள் பொழிந்து கொண்டிருந்தன.

சண்பகாதேவி கோவிலில் தரிசனம் முடித்துக்கொண்டு கீழே இறங்கும் போதே மாலை ஆறுமணி ஆகிவிட்டது. சுப்பராமன் தனக்குக் கொஞ்சம் எழுத்து வேலையிருப்பதாகக் கூறி வேங்கடரத்தினத்திடம் விடைபெற்றுக்கொண்டு தான் தங்கியிருந்த தளவாய் ஹவுஸிற்குச் சென்றுவிட்டான். பங்களா வாட்ச்மேன் தனக்கு இலஞ்சி வரை போக வேண்டிய வேலை இருக்கிறதென்றும்,மறுநாள் காலையில்தான் திரும்ப முடியுமென்றும் கூறி பிளாஸ்கில் காப்பியை வாங்கிக் கொணர்ந்து வைத்துவிட்டுப் போய்விட்டான்.

வேங்கடரத்தினம் பங்களாவில் தனிமையை அடைந்தார். 'நல்லவேளையாக வாட்ச்மேனும் சுப்பராமனும் விடைபெற்றுக் கொண்டு போனார்கள். எனக்கு எழுதுவதற்கு வேண்டுமான தனிமை கிடைத்து விட்டது - என்ற மனச் சந்துஷ்டியோடு எழுத முற்பட்டார் அவர் நிலாவையும் மலைக்காட்சிகளையும் கண்ணால் கண்டு கொண்டே எழுதலாமென்று நாற்காலியையும் மேஜையையும் பால்கனிக்கு அருகில் எடுத்துப் போட்டுக் கொண்டார். பால்கனிக்கு நேர் எதிரே கீழேயுள்ள தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பல நிற ரோஜாச் செடிகளில் மலர்ந்து விளங்கும் மலர்களைப் போல, அவர் மனத்தில் கற்பனைகள் விரைவாக மலர்ந்தன.

“காதம்பரியின் மலர்க்கரங்கள்.ரகுராமனின் தலையைக் கோதின. இந்த வாக்கியம் இரண்டாவது அத்தியாயத்தின் கடைசி வாக்கியமாக அமைந்திருந்தது. அன்று வாட்ச்மேனிடம் அரைகுறையாகக் கேட்ட சம்பவத்தின் விளைவாகக் காதம்பரி, 'ரகுராமன் - என்றே தம் கதையின் முக்கிய பாத்திரங்களுக்குப் பெயர் வைத்திருந்தார் அவர் குற்றால மலையில் நிலவு பொழியும் இரவு ஒன்றில் ஆரம்பிப்பதாகவே கதையின் சம்பவத்தையும் தொடங்கியிருந்தார். அனுபவத்தின் சாயை சிறிதளவாவது பிரதிபலிக்காமல் கற்பனை பிறவாது அல்லவா?

சரியாக மணி பன்னிரெண்டு குளிர், சாரல், இரண்டும் அதிகமாகி விடவே நாற்காலியையும், மேஜையையும் உள்ளே எடுத்துப் போட்டுக்கொள்ளலாம் என்று எண்ணி முதலில் நாற்காலியைக் கொண்டு போய்ப் போட்டார்.

"மேஜையைத் தூக்கிக் கொண்டு போகலாம்" என்று மீண்டும் பால்கனியை அடைந்த வேங்கடரத்னம் அப்படியே திடுக்கிட்டுப்போய் நின்றார்!