பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1034

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

விட வேண்டியிருந்ததாம், அதுனாலே இந்தப் புகார் விஷயத்திலேயே போ லீஸ் தயங்கறாங்க.”

சாரதாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, அத்தனைக் குடித்தனக்கார ஆண்களும் வீட்டில் இருந்த போதே பகல் ஒன்றரை மணிக்குச் சரியாக வாசலுக்கு நேரே காரைக் கொண்டு வந்து நிறுத்தி, ஏதோ தாலி கட்டின மனைவியைக் கூப்பிடற மாதிரி, “ஏய் சாரதா! இன்னிக்கு மாட்னி ஷோவுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கியிருக்கேன். வம்பு பண்ணாமே எங்கூட உடனே புறப்படு” என்று இரைந்து கூப்பிட்டுக் கொண்டே அட்டகாசமாக வந்தான் அவன்.

எல்லாப் போர்ஷனின் வாசலிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அத்தனை பேரும் நின்று வேடிக்கை பார்த்தார்களே ஒழிய, “நீ யார்டா ராஸ்கல் அவளைக் கூப்பிட?” என்று ஒருத்தனாவது தைரியமாகக் கேட்க முன் வரவில்லை. ஏ.ஜி. ஆபீஸ் கிளார்க், ரிடயர்டு போஸ்ட் மாஸ்டர் கேசவையர், எவர்பிரைட் ஸ்டீல் கம்பெனி ஸ்டெனோ நாகராஜன், ரெவின்யூ.போர்டு ஆபீஸ் ரங்கராமானுஜம், எல்.ஐ.சி. லோகநாதன் ஒருத்தராவது தம் போர்ஷன் முகப்பிலிருந்து ஒரு முழங்கூட முன்னுக்கு நகர்ந்து வரவில்லை. - -

முந்தா நாள் சிங்கராசாரி தெரு டிரஸ்ட் கல்யாண மண்டபத்தில் பதினைந்து ஏழைப் பையன்களுக்குத் தர்ம உபநயனம் பண்ணி வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்ட ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டர் கூட வாயைத் திறக்காமல் நின்று கொண்டு வேடிக்கை பார்த்ததைக் கண்டு சாரதாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது கோபம்.

அன்றிரவு அப்பா திரும்பி வந்ததும், “வேறு வீடு பாருங்கள்! அல்லது இந்த ரெளடியைத் தடுத்து நிறுத்த வழி சொல்லுங்கள்” என்று கண்டிப்பாகக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தாள் சாரதா.

ஆனால், அப்பா அன்றிரவு திரும்பி வந்த நிலையில் சாரதா அவரிடம் அதிரப் பேசுவதற்கே முடியாது போயிற்று. காலிலும் கையிலும் அடுப்புச் சரிந்து கொதிக்கிற எண்ணெய் கொட்டிப் புண்ணும் ரணமுமாக, கூடவேலை பார்க்கிற ஆள் டாக்ஸியில் அவரைக் கொண்டு வந்து விட்டுப் போனான். இந்த நிலையில் அவளே நாலு நாள் லீவு போட வேண்டியதாயிற்று.

கல்லூரிக்கு லீவு போட்டு விட்டு அவள் அப்பாவுக்குச் சிச்ருஷை செய்த நாட்களிலும் அந்த ரெளடியின் தொல்லை ஓயவில்லை. சாரதா அப்பாவிடம் அழுது புலம்பினாள்.

“சூரியனைப் பார்த்து நாய் குறைக்கறதுன்னு நெனைச்சுண்டு பேசாம இரும்மா. அவனை எதிர்த்துக்க நமக்குப் பலமும் மனுஷா துணையும் இல்லே. அவன் பெரிய இடத்துப் புள்ளையாம்! தெய்வத்துக்குக் கண் இருந்தா, அவனைக் கேக்கட்டும். நம்மாலே வேற ஒண்ணும் பண்ண முடியாது சாரதா” என்றார் அனந்து.

சென்னையிலேயே அனந்துவின் கூடப் பிறந்த சகோதரிகள் இருவர் இருந்தனர். ஒருத்தி அவருக்கு மூத்தவள்/ மற்றொருத்தி இளையவள். இருவருக்கும் வயது வந்த