பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கடைசியாக ஓர் ஆண்பிள்ளை

1035

மகன்கள் இருந்தனர். அந்த மருமகன்களில் ஒருத்தருக்குச் சாரதாவைக் கொடுக்கலாமா என்று கூட அனந்துவுக்கு ஒரு நினைப்பு இருந்தது.

அனந்து கொதிக்கிற எண்ணெய் கொட்டித் தீப்புண்களோடு படுத்த படுக்கையான மறுநாள், அவருடைய தங்கையும் ஸ்டேட் பாங்கில் ஆபீஸராக வேலை பார்க்கும் அவளுடைய மகனும் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் வந்திருந்த சமயம் பார்த்து அந்தக் காதல் ரெளடியும் வந்து சேர்ந்தான்.

அனந்து உடனே முழு விவரத்தையும் தன் மருமகனிடம் சொல்லி, “இந்தச் சண்டாளனைக் கொஞ்சம் விசாரியேன்! வயசு வந்த பொண்ணு கிட்ட நாள் தவறாமல் வந்து வம்பு பண்றான். அக்கம் பக்கத்திலே பேரைக் கெடுத்துடுவான் போலிருக்கு” என்று கேட்டுக் கொண்டார்.

“இந்த மாதிரி ரெளடி கிட்ட எல்லாம் நேரே வம்பு பண்ணினாக் கையிலே பிளேடு, கத்தி கித்தி வச்சிருப்பான் மாமா! நம்ம கெளரவம் என்ன ஆறது? அவன் அளவுக்கு நம்மாலே எறங்க முடியாது. நான் வேணா ஒண்ணு பண்றேன். போறப்போ போலீஸ்லே ஒரு ‘ஈவ்டீஸிங்’குன்னு புகார் கொடுத்துட்டுப்போறேன்” என்றான், அந்த மீசை முளைத்த ஆண் பிள்ளை, சாரதாவுக்கு ‘சை’ என்றாகி விட்டது.

மூன்றாம் நாள், அனந்துவின் மற்றொரு சகோதரி வந்திருந்தாள். அவள் பிள்ளை ரகுவுக்கு ஒரு கம்பெனியில் ஸேல்ஸ் மானேஜர் உத்தியோகம். அவன் நல்ல விளையாட்டு வீரன், உடற்கட்டுள்ள பலசாலி. கொஞ்சம் கராத்தே, ஜூடோ பயிற்சி கூட உண்டு. அவனைக் கொஞ்ச நேரம் அங்கேயே தங்கச் சொல்லி, அந்தக் காதல் ரெளடியிடம் மோத விட வேண்டும் என்று முயன்றார் அனந்து. அவனும் சம்மதித்தான். அதற்குள் ஏதோ பேச்சு வாக்கில் சாரதாவுக்குத் தொல்லை கொடுக்கிற அந்த இளைஞன் ஐ.ஜி.யின் தங்கை பிள்ளை என்பதால், போலீஸில் எவ்வளவு புகார் செய்தும் பயனில்லை என்று அவரே சொல்லி விடவே, அவனுக்குப் பயம் வந்து விட்டது.

“மாமா, யாரோ எவனோன்னாப் பரவாயில்லை. நாலு உதை உதைச்சுத் தெருவிலே தூக்கி எறிஞ்சிடலாம். நீங்க சொல்ற மாதிரியாயிருந்தா, யோசிச்சு திட்டம் போட்டுத்தான் ஏதாவது செய்யணும். அவசரப்படாதீங்கோ. சாரதாவைக் கூடக் கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லுங்கோ” என்று உபதேசம் செய்து விட்டு நழுவி விட்டான். இந்தத் தொல்லைக்கு விடிவே இல்லை என்ற முடிவுக்குச் சாரதா வந்து விட்டாள்.

“இரண்டு பேருக்கும் ஏதாவது பழைய சம்பந்தம் இருக்கும். இல்லாட்டா ஒருத்தன் இப்படி விடாமத் துரத்திண்டு கார்லே நாள் தவறாம வருவானா? முதல்லே கொஞ்சம் வருமானத்துக்கு ஆசைப்பட்டிருப்பாள். அப்புறம், ‘இப்போ வராதே, போடா’ன்னு ஒதுக்கினா, அவன் எப்படிப் போவான்?” என்று கூட அக்கம் பக்கத்தில் அபாண்ட மாகப் பேச்சுக் கிளம்பி விட்டது. நாக்கில் நரம்பில்லாத சில அயோக்கியன்கள் விதவிதமாகப் பேசத் தலைப்பட்டனர். “பணத்துக்கு ஆசைப்பட்டு அனந்துவே