பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பாக்கிப் பணம்

1049

“பாக்கியாவது ஒண்ணாவது? ஏ.மி. பாக்கி? பாக்கிலேது சாமி” என்று தனக்குத் தெரிந்த அரைகுறைத் தெலுங்கில் முடித்துவிட்டார். - “நமஸ்காரமண்டி' - என்று ஒரு பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு அந்த ஆந்திராக்காரன் விடைபெற்றுப் போய்ச் சேர்ந்தான். அவன் தலை மறைந்ததும் பில் எழுதிக் கிழித்துப் போட்டுவிட்டுக் கடைக்குச் சேரவேண்டிய பணத்தை ஒழுங்காகக் கல்லாவில் எண்ணிப் போட்டுவிட்டு மீதியைச் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டார் வடிவேலு. கடைக்கணக்கு முடித்து அக்கவுண்ட் புக், டே புக், கேஷ் ரிஜிஸ்தர் எல்லாவற்றிலும் கையெழுத்துக்கூடப் போட்டாயிற்று. கடையையும் பூட்டிவிட்டார்கள். வடிவேலு கம்பெனியின் மானேஜர் என்ற முறையில் சாவிக் கொத்தும் அவர் கைக்கு வந்துவிட்டது. - மனத்தில் இன்பக் குறுகுறுப்பும் ஆசைத் தவிப்பும் தாங்கமுடியவில்லை. கடையிலிருந்து கிளம்பிய குமாஸ்தா கேஷியர் முதலியவர்களோடு சேர்ந்து போகாமல் நயினாரைத் தேடிச் செல்வதற்காக வேண்டுமென்றே பின் தங்கினார் வடிவேலு. "சார்! வேற யாரும் வரலேன்னா என்னைக் கொஞ்சம் ராமபவன் வாசல்லே விட்டுடlங்களா?' என்று வடிவேலுவின் ஸ்கூட்டரில் லிஃப்ட்கேட்டுக் குழைந்தார் பில்போடுகிற பஞ்சாட்சரம். “நான் இன்னைக்கி ராமபவன் பாதையாப் போகலே. இங்கே ஒருத்தரைப் பார்க்கணும். வெயிட் பண்ணப் போறேன்.” - "அப்பிடியானா வேண்டாம் சார் நான் வரேன்” பஞ்சாட்சரம் சொல்லி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். வடிவேலு ஸ்கூட்டர் அருகே தயங்கி நின்றார். பத்து நிமிஷத்தில் நயினாரே அவரைத் தேடி அங்கு வந்தான். கையைப் பாட்டில் மாதிரி அடையாளம் காட்டி "அதுகூடக் கிடைச்சுது சார் கொண்டாந்திருக்கேன்” என்றான் நயினார். - “சபாஷ்” என்றார் வடிவேலு. "அங்கே அந்த வீட்டுக்குப்போகவேணாம் சார்! மாசக் கடைசி. திடீர்னுபோலீஸ் ரெய்டு வந்தாலும் வரும். ரெய்டு இல்லாட்டியும் அதைச் சொல்லி மிரட்டியே அதிகப் பணம் பறிச்சுடுவாளுவ கடைச்சாவி உங்ககிட்டத்தானே இருக்கு? நீங்க கடையைத் திறந்து உள்ளார இருங்க.நான் போயி ஒரு டாக்ஸியிலே இட்டாந்துடறேன். சோடா வாங்கிக் குடுத்துட்டுப் போறேன். சிப்ஸாம் கொண்டாரேன்; பாட்டிலை. முடியுங்க. அதுக்குள்ளே உருப்படி வந்துடும். என்னா, நான் சொல்றது. சரிதானே?" . . . . “ரொம்ப சரி. நயினார்! நான் இங்கே கடையிலேயே இருக்கேன். இந்தா டாக்ஸிக்குப் பத்து ரூபா வச்சுக்க, உள்ளே வந்து பாட்டிலைக் கொடுத்தப்புறம் கிளம்பு.” - - - -