பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ! தீமிதி * 665 பெரிய பண்ணையாரும், அவர் சம்சாரமும், திருச்செந்துருக்கு ஸ்வாமி தரிசனத்திற்குப் போயிருந்ததால் இராஜகோபாலைத் தம் வீட்டுக்குக் கொண்டு போனார் மூப்பனார். அவன் உடம்பில் நெருப்புக் காயம் உறுத்தாமல் இருப்பதற்காகத் தலை வாழைக் குருத்தை விரித்து விளக்கெண்ணெயைத் தடவி அதில் படுக்கவிட்டிருந்தார்கள். சுப்பையா வைத்தியரைத் தேடிப் போனவன் வாடிய முகத்தோடு திரும்பி வந்தான். “என்னடா: வைத்தியரு எங்கே? வீட்டிலே இல்லையா?” "அவரு வரமாட்டாராம்! முந்தாநாளுச் சிவன் கோவிலுக்குப் போயிட்டிருக்கிறப்போ இராசகோவாலும் அவன் ஆட்களும் அவரை மட்க்கிவிட்டு, ஏதோ எடக்காகப் பேசினாங்களாம்.அதனால், நான் விசயத்தைச் சொன்னதும் அவரு, 'அந்த அதிகப் பிரசங்கிப் பயலுக்கா? போய் எவனாவது ஒரு பகுத்தறிவு” வைத்தியனைப் பார்த்துத் தேடிக்கிட்டுப் போ. நான் சிவன் கோவிலுக்குப் போறவன். சாமி பூதம் உண்டுன்னு நம்பறவன்.என் மருந்து அவன் உடம்பிலே ஏறாது. போ! வழி அதுதான் அப்படின்னு நிர்த்தாட்சண்ணியமாகப் பேசிட்டாருங்க” என்றான். - "அப்படியா சேதி? நானே போறேன்” என்று மூப்பனாரே தெருவில் இறங்கி வைத்தியர் வீட்டை அடைந்தார். ‘சுப்பையா வைத்தியரே! நாய் கடிக்குதுன்னா நாமுமாபதிலுக்குக் கடிக்கிறது? அப்பன், ஆத்தா கூட ஊரிலே இல்லே. எனக்கு மட்டும் தலைப்பொறியா காப்பாத்தணுமினு? ஆயிரமிருந்தாலும் உசிரு பெரிசு பாருங்க. எப்போதோ சொன்ன வார்த்தையை மனசுலே போட்டுக்காதிங்க. வாங்க என் பேச்சைக் கேளுங்க. மூப்பனார் வைத்தியர் கையைப் பிடித்துக் கொண்டு அவரைக் கெஞ்சினார். ஊருக்குப் பெரிய நாட்டாண்மைக்காரர் கெஞ்சவே, மறுக்க முடியாமல் உடன் கிளம்பினார் சுப்பையா வைத்தியர். பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இராஜகோபால் எழுந்து நடமாட முடியவில்லை. புண்! புண்! புண்! - உடம்பில் ஒரே தீப்புண்கள் இரணமாகத் தோற்றமளித்தன. "அப்பா இராஜகோவாலு. உடம்பை அசைச்சுப் புரளாமே படுத்திரு. புண்ணு புரையேறிச் சீழ் வைத்தால் கெடுதல். இன்னும் உங்க ஐயா திருச்செந்துரிலிருந்து வரலே! வேத்துமையா நினைக்காதே. அவங்க வருகிற வரை நம்ப வீட்டிலேயே இருக்கலாம்.”. மூப்பனார் அருகிலமர்ந்து குழைந்த குரலில் கூறினார். திடீரென்று விக்கி விக்கி அழுதான் இராஜகோபால்."சீ இதென்னது? குழந்தைப்புள்ளே மாதிரி அழுவலாமா? வலிக்கத்தான் வலிக்கும். பொறுத்துக்க, என்ன செய்யிறது: " மூப்பனாரு மாமா. உடம்பு வலிக்கலே! புண்ணும் வலிக்கலே மனசுதான் வலிக்குது. நீங்கள்ளாம் எவ்வளவு பெருந்தன்மையா இருக்கீங்க. நான் இப்படிச்