பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1056

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


"இப்ப நான் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறேன்.”

"அறிவுக்கும் பொருளுக்கும் சம்பந்தமேயில்லை என்கிறீர்களா?”

"நான் எதுவும் சொல்லப் போறதில்லே. உங்க இஷ்டம். பணம் அவசியம்னு தோணித்துன்னா மறுபடி என்னை வந்து பாரும்.”

சாகக் கிடக்கும் மனைவி தாங்க முடியாத வைத்தியச் செலவுகள், குழந்தைகளின் காலேஜ் ஃபீஸ், பள்ளிக்கூடச் சம்பளங்கள், வீட்டுச் சாமான்களின் செலவுகள், எல்லாமாகக் கிடுக்குப் பிடி போட்டு இறுக்கியதால் இரண்டு நாள் கழித்துச் சங்கரே ஒரு விரக்தியில் மனம் மாறி மறுபடியும் பூங்கொத்து ஆசிரியரைப் போய்ப் பார்த்துத் தெலுங்கு நடிகை ஜெயசரோஜாவின் பெயரில் தமிழ்ப் பத்திரிகை 'பூங்கொத்தில் தொடர் கதை எழுத ஒப்புக் கொண்டுவிட நேர்ந்தது. ஆனால், சங்கர் கூனூர் போக மட்டும் இசையவில்லை. சென்னையிலேயே அடையாறில் இருந்த அந்த நடிகையின் பங்களாவில் ஒர் ஏ.சி. அறையில் தங்கி அதை எழுத ஒப்புக் கொண்டிருந்தான். நோயாளி மனைவியையும் அன்றாடம் காய்ச்சிக் குடும்பத்தையும் விட்டுவிட்டுக் கூனூர் போக அவன் விரும்பவில்லை.

அங்கே அவனுக்கு ராஜோபசாரம் நடந்தது. நடிகை பெயரில் அவன் எழுதிய நாவலின் பெயர் 'கசங்காத ரோஜா'.

ஏறக்குறைய நாவல் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது. 'ஃபினிஷிங் டச்' கொடுக்க வேண்டியதுதான் பாக்கி.

நாளை எல்லாம் முடித்துக் கொடுத்துவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டுவிடலாம். அதற்குள் எழுத்தாளன் சங்கருக்கு ஓர் ஆசை எழுந்தது. தனது எழுத்துக்களை எல்லாம் வழக்கமாக அச்சுக்கு அனுப்புமுன் படித்துப் பார்த்து அபிப்பிராயம் சொல்லும் ஒர் ஆத்ம சிநேகிதனிடம் இதையும் படித்துப் பார்க்கச் சொல்லி அபிப்பிராயம் கேட்கலாமா என்று தோன்றியது. 'யார் பேரிலோ வெளி வரப்போகிற ஒர் எழுத்தைப் பற்றி இத்தனை அக்கறை தேவைதானா? என்றும் தயக்கமாகவும் இருந்தது. முடிவில் ஆசைதான் வென்றது.

அன்றாடவழக்கம்போல் மாலையில் நடிகையின் பங்களாவிலிருந்து வெளியேறி, வீட்டுக்குப் போய் மனைவியை டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டிவிட்டுத் திரும்பக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டுத் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ஒரு மாடியில் தனிக்கட்டைவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த தனது அந்த நண்பனிடம் தன் புதிய கையெழுத்துப் பிரதியோடு போனான் சங்கர்.

சங்கர் நண்பனின் அறைக்குப் போனபோது மாலை ஏழு மணி. நண்பன் சங்கரின் புதிய நாவலைப் படித்து முடித்தபோது இரவு பதினொன்றரை நண்பன் உணர்ச்சிவசப்பட்டு சங்கரைப் பாராட்டினான்.

"இதை உன் 'மாஸ்டர் பீஸ்' எனறு நான் துணிந்து சொல்வேன். நாவல் பிரமாதமாக வந்திருக்கிறது. இந்த நாவலிலிருந்து தமிழ்நாவல் இலக்கிய