பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி சுயமரியாதைக்கும் ஒரு விலை * 1057

வரலாற்றிலேயே ஒரு பொற்காலம் ஆரம்பமாகும். இது வெளிவந்தால் பரிசும், பாராட்டும், புகழும் உன்னைத் தேடி வரும்!” - அது எதற்காக, யார் பெயரில் வெளியிடுவதற்காக எழுதப்பட்டது என்பதை நண்பனிடம் வெளியிடத் தயக்கமாக இருந்தது சங்கருக்கு.யோசித்தான் தயங்கினான். மனம் குழம்பினான். தெளிவு பிறக்கச் சிறிது நேரம் பிடித்தது. பின்பு நிதானமாக நண்பனைக் கேட்டான்.இப்போது சங்கரின் குரலில் குழப்பமில்லை.

"ரூம் சர்வீஸ், உணவு இவற்றோடு ஒரு முதல்தர ஹோட்டல்ல ஏ.ஸி.ரூமுக்கு ஐந்து நாளைக்கு என்ன சார்ஜ் செய்வார்கள், சொல்ல முடியுமா?”

"ஏன்? அதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது:”

“இல்லை! உடனே அது எனக்குத் தெரிந்தாக வேண்டும்.”

சங்கரிடம் சில விவரங்களை விசாரித்த பின் ஏதோ ஒரு கணக்குப் போட்டு ஐந்து நாளைக்கு ரூ.525 செலவாகும் என்று தெரிவித்தான் நண்பன்.

"உன்னிடம் இப்போது அவ்வளவு பணம் இருக்குமா?”

“ரொக்கமாக இல்லை. பேங்கில் இருக்கிறது. காலையில் எடுக்கலாம்.”

“இப்போதே செக் தர முடியுமா?”

“அவசியமானால் தருகிறேன்.” “உடனே நடிகை ஜெயசரோஜா பெயருக்கு ரூ.525க்கு ஒரு செக் எழுது”

நண்பன் செக் புத்தகத்தை எடுத்து எழுதிச் செக் லீஃபைக் கிழித்துச் சங்கரிடம் நீட்டினான்.

“சகோதரி ஜெயசரோஜாவுக்கு,

ஐந்து நாட்களாக நான் எழுத இடம் கொடுத்து, உணவு - உறையுள் அளித்ததற்கு நன்றி. அதற்கான செலவுகளை ஈடு செய்வதற்காக இதனுடன் உங்கள் பெயருக்கு ஒரு செக் இணைத்துள்ளேன். செக்கைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.”

என்று பொருள்பட ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துடன் அந்த செக்கையும் இணைத்து நண்பனிடம் ஒரு தபால் கவரும் ஸ்டாம்பும் வாங்கி உடனே ஒட்டிப் போஸ்ட் செய்துவிட்டான் சங்கர்.

இருவருமாக நடந்தே போய் மவுண்ட்ரோட் போஸ்ட் ஆபீஸில் அதைச் சேர்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது ஸ்டார் டாக்கீஸிலும் பாரகனிலும் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா விட்டுவிட்டார்கள்.

தெரு தற்காலிகமாகக் குரல்களாலும், ஜனங்களாலும் கலகலப்படைந்திருந்தது. நண்பன் சங்கரைக் கேட்டான்:

"இதெல்லாம் என்னப்பா கூத்து?”

நா.பா. II — 28