பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பின்னக் கணக்கில் தகராறு

1069

பண்ணி ஆட்டோ ரிக்ஷாக்காரனுக்கு அல்லது பட்பட்காரனுக்கு குடுக்க ஒரு ரெண்டு ரூபாய் சில்லறையாக் குடுத்துட்டுப்போங்கோ.நான் ‘கரோல் பாக்’ போகணும்” என்று மன்றாடாமல் விட்டாரே என்பதில் எனக்குத் திருப்தியாக இருந்தது. இதற்கு மேலும் நானே போய் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விவரம் சொல்லலாமா என்று தயங்கினேன்.

என் மணிபர்ஸில் அப்போது முழுசாக ஒரு பத்து ரூபாய் நோட்டும், என் ஒருவனுக்கு மட்டும் வீடு போவதற்குப் பட்பட் சார்ஜும் மட்டுமே இருந்தன.

நான் ராவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவரையும் என்னோடு அழைத்துச் செல்வதாக இருந்தால், முழுசாக இருக்கும் பத்து ரூபாயைக் கண்டிப்பாக மாற்ற வேண்டி நேரிடலாம். அது மட்டுமில்லை. அவரைக் கூட அழைத்துக் கொண்டு என் வீட்டுக்குப் போன பின் நான் மேலும் பல முழு பத்து ரூபாய்களை மாற்றும்படி ஆனாலும் ஆகி விடக் கூடும்.

அதற்கு நான் தயாராக இல்லை. முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய், முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற்பட்டு விட்டது. அந்தத் தத்துவத்தின் குருநாதருக்கு முன்னிலையிலேயே அந்த வாசனா ஞானம் என்னுள் பிறந்ததுதான் ஆச்சர்யம்.

(கல்கி, தீபாவளி மலர், 1979)