பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / ஹை பவர் கமிட்டி * 1077

கலிஃபோர்னியா - ஹோனலூலு - டோக்கியோ - ஹாங்காங் - கோலாலம்பூர் - இந்தியா என்பதாக மாற்றினர். இந்த மாறுதலுக்காகச் சில லட்சங்கள் அதிகம் செலவாகுமென்று தெரிந்தாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. குழுவினர் சான்பிரான்ஸிஸ்கோ சென்று அங்கிருந்து ஹவாய் பயணமானார்கள்.

ஈஸ்ட்வெஸ்ட் சென்டரில் வில்லியம் புரூஸ் என்ற அந்த அமெரிக்க அறிஞரை அவர்கள் சந்தித்துத் தங்களை அறிமுகம் செய்து கொண்டபோது அவர் ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தார்.

“உங்கள் ஹெட் குவார்ட்டர்ஸ்ஸிலிருந்து அறுபதாவது மைலில் ஒரே இடத்தில் கூட்டாக இணைந்து வாழும் பத்து டிரைபல் ஃபேமிலீஸைப் பற்றி ஆராய அங்கே நேரில் போகக்கூட நினைக்காமல் இவ்வளவு தூரமா அலைந்தீர்கள்? வேஸ்ட் ஆஃப் மணி, வேஸ்ட் ஆஃப் டைம்” என்று பொரிந்து தள்ளினார் அந்த அமெரிக்க அறிஞர். அந்த அறிஞரின் அசெளகரியமான ஒளி மறைவில்லாத கேள்விகள் சங்கடப்படுத்தினாலும் பொறுத்துக் கொண்டு டேப்புகளையும், கோப்புகளையும் பற்றி அவரிடம் விசாரித்தார்கள் அவர்கள். அறிஞர் ஒருபுறம் அவர்களைச் செல்லமாகக் கண்டித்திருந்தாலும் மறுபுறம் பண்புடன் உபசரித்து டேப்புகளைப் போட்டுக் காட்டினார். கோப்புகளைப் பிரித்து விவரித்தார். விடை கொடுக்கும்போது ஞாபகமாக, “முதலில் பகடர் ஏரியாவிற்குப் போய் அவர்களை நேரில் சந்தியுங்கள்” என்று அவர்களுக்கு அறிவுரையும் கூறி அனுப்பினார்.

ஜப்பான், ஹாங்காங், மலேசியா எல்லாம் சுற்றி விட்டுக் குழுவினர் இந்தியா திரும்பிய போது ஏறக்குறைய ஒன்றறை மாதம் கழிந்திருந்தது. அதற்குள் நாட்டிலும் சில மாறுதல்கள் நடந்திருந்தன. சிலர் கூட்டாகக் கட்சி மாறியதால் ஒரு மந்திரிசபை கவிழ்ந்து மற்றொரு மந்திரிசபை பதவி ஏற்றிருந்தது. புதிய மந்திரி சபைக்கு இப்படி ஒரு 'ஹைபவர் கமிட்டி நியமிக்கப்பட்டிருப்பது பற்றி அறியவே வாய்ப்பில்லை.

பகடர் ஹைபவர் கமிட்டியின் மூன்றாவது கூட்டத்தில் ஃபைனான்ஷியல் அட்வைஸர் நிதி நிலைமை பற்றிக் கவலை தெரிவித்தார்.

"திட்ட ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட2கோடி ரூபாயில் இதுவரை ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. எஞ்சிய ஒரு கோடியாவது திட்டத்தின் பட்ஜெட் காலவரையறைக்குள் பகடர் நல்வாழ்வுக்காகச் செலவழித்தாக வேண்டும்” என்றார். .

பகடர் மொழி, கலைகள், கலாசாரம், பழக்க வழக்கங்கள் பற்றிய ‘என்ஸைக்ளோ பீடியா ஒன்று வெளியிட வேண்டும் என்ற ஓர் உறுப்பினரின் யோசனை ஏற்கப்பட்டது. . . “எப்படி என் யோசனை? வெறும் நல்வாழ்வுத் திட்டங்கள் என்று உடனே பகடர்களுக்கு எதையாவது செய்து முடித்துவிட்டால் இந்தக்கமிட்டியை நாளைக்கே