பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1078 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கலைத்து விடுவார்கள். கமிட்டி கலைக்கப்பட்டால் நாம் தெருவில் நிற்போம். 'என்ஸைக்ளோபீடியா' என்றால் அது இந்த ஜன்மத்தில் முடியாது. ஜவ்வு மிட்டா, மாதிரி வேலை இழுபடும். நம் கமிட்டியும் அதுவரை நீடிக்கும். அதற்காகத் தான் இப்படி ஒரு போடு போட்டேன்.”

"பிரமாதமான ஐடியா” என்று அதைப் பாராட்டினார் மற்றொரு சக உறுப்பினர்.

என்ஸைக்ளோபீடியாவுக்கு ஆசிரியராக மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் 'லெக்ஸிகோகிராபியில் பி.எச்.டி.பண்ணிய ஒரு நிபுணர், மாதம் ரூ. 2000 சம்பளத்தில் ஆறு உதவியாசிரியர்கள், ரூ.800 சம்பளத்தில் நான்கு புரூஃப் ரீடர்கள் எல்லாம் நியமிக்கப்பட்டனர். மாதம் பத்தாயிர ரூபாய் வாடகையில் ஒர் எடிட்டோரியல் அலுவலகம் அமர்த்தப்பட்டது. 'ஹைபவர் கமிட்டி' சந்திப்பதற்கான நிரந்தர கமிட்டி ரூமை 'ஏர்க்கண்டிஷன்' மற்றும் இண்டீரியர் டெகரேஷன் செய்து முடிக்கவும் பெருந்தொகை ஒதுக்கப்பட்டது.

"அந்த அமெரிக்க அறிஞர் சொல்லியதுபோல் பகடர்களை இன்னும் நம் கமிட்டி நேரில் போய்ச் சந்தித்து அவர்கள் குறைகளை அறியவில்லையே?’ என்று அவசரக் குடுக்கையாகக் கேள்வி கேட்டார் ஒர் உறுப்பினர். .

“அதற்கென்ன இப்போது அவசரம்? என்ஸைக்ளோபீடியா வேலை முடிந்து அதன் வெளியீட்டுவிழாவில் ஒரு பகடரையே வரவழைத்து அவரிடம் முதல் பிரதியை வழங்கினால் போயிற்று” என்று குழுவின் தலைவர் அதற்குச் சமாதானம் சொல்லிவிட்டார். என்ஸைக்ளோபீடியாவுக்கான பேப்பர் வாங்குவது, பிரிண்டிங் பைண்டிங் காண்ட்ராக்ட்டுகள் விடுவதில் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் கொஞ்சம் வகையாகவே கிடைத்தது. இப்படி முதல் திட்டக்காலத்திலேயே - அந்தக் காலம் முடிவதற்கு முன்பாகவே ஹைபவர்கமிட்டி ஒதுக்கீட்டுத் தொகையான 2 கோடி ரூபாயையும் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது.

ஜாதிக்காய் மலை மலேரியா உள்ள இடமாகையினால் அங்கு எஞ்சியிருந்த 40 பேர் அடங்கிய 10 பகடர் குடும்பங்களிலுமாக அந்தத் திட்டத்தின் கால எல்லைக்குள் 12 பேர் மலேரியாக் காய்ச்சலில் உயிர் துறந்திருந்தார்கள். எஞ்சிய இருபத்தெட்டுப் பேரில் 4 பேர் மூப்பினால் இயற்கை மரணம் அடைந்திருந்தனர்.

ஆக, இரண்டாவது திட்டகாலத்துக்கு முன்பே 40ஆக இருந்த பகடர் இனத்தின் மொத்த எண்ணிக்கை குறைந்து போய் இரண்டு டஜனுக்குள் வந்திருந்தது.

இரண்டாது திட்ட காலத்தில் பகடர் என்ஸைக்ளோபீடியா முதலிய வேலைகளைப் பூர்த்தி செய்யவும் பகடர் இன முன்னேற்றத்துக்கான பிற சாதனைகளைப் புரியவும் ரூபாய் ஆறுகோடிக்குக் குறையாமல் ஒதுக்க வேண்டும் என்று 'ஹைபவர் கமிட்டி' கூடித் தீர்மானம் போட்டு அதை அரசுக்கு அனுப்பியிருந்தது.அந்த மழைக்காலத்தில் இடைவிடாமல் தொடர்ந்து ஒரு வாரமாகப் பெய்த அடைமழையின் போது ஏற்பட்ட பயங்கரமான மலைச் சரிவில் ஜாதிக்காய்