பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / ஹை பவர் கமிட்டி * 1079

மலைத் தொடரில் ஒரே பகுதியில் மீதமிருந்த பகடர் குடியிருப்புகள் முழுவதுமே மண்மூடி அமிழ்ந்து விட்டது.

உலகில் கடைசியாக மீதமிருந்த சில பகடர்களுமே கூண்டோடு அழிந்து போயிருந்தனர். முதலில் பகடர்களைப் பற்றித் தலையங்கம் எழுதிய அதே இடது சாரித் தினசரி இதை எட்டுக் காலம் தலைப்புக் கொடுத்து முதல் பக்கச் செய்தியாகத் தலைப்பிலேயே துணிந்து பிரசுரித்து விட்டு உள்ளே 'பகடர்’ நல்வாழ்வுக்கான ஹைபவர்கமிட்டியைப் பற்றிச்சாடுசாடென்று சாடித்தலையங்கமும் எழுதியிருந்தது.

உடனே ஆட்டு மந்தைகளைப்போல அத்தனைப் பெரிய தினசரிகளும் பகடர் பற்றி முதல் திட்டக்காலத்தில் அந்த இன அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபாயில் ஒரு பைசாக்கூட அதற்காகச் செலவிடப்படாமலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தன. விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பார்லிமெண்டில் கேள்விக் கணைகள் பறந்தன. அதன் விளைவு 'ஹைபவர் கமிட்டி’ கலைக்கப்பட்டு அதன்மேல் ஒரு விசாரணைக் கமிஷன் போடப்பட்டது. ‘என்ஸைக்ளோபீடியா' ஆபிஸ் 'கமிட்டி ஹால்' யாவும் பூட்டி ஸீல் வைக்கப்பட்டன. ‘மலைச்சரிவில் இறந்துபோன ஒவ்வொரு பகடர் குடும்பத்துக்கும்பத்தாயிரம் ரூபாய் நஷ்டஈடு தர முடிவு செய்துள்ளேன்” என்று சபையில் அறிவிக்க இருந்த அமைச்சரை உரிய நேரத்தில் அவரது காரியதரிசி எச்சரித்துத் தடுத்தார்.


"சார் பஸ் விபத்துக்கும், ரயில் விபத்துக்கும் இப்படி அறிவிச்சு அறிவிச்சு பழகின பழக்க தோஷத்திலே இதுக்கும் அதுமாதிரி அறிவிச்சுப்பிடாதிங்க எதிர்க்கட்சிங்க கேலி பண்ணிச் சிரிப்பாங்க! உங்க நஷ்டஈட்டை யாரிட்ட கொடுக்கப் போlங்க! இனிமே உலகத்திலே பகடர் இனமே கிடையாது. அந்த இனத்திலே கடைசியா மிச்சமிருந்த 24 பேருமே மலைச்சரிவிலே கூண்டோட போயிட்டாங்க” என்று காரியதரிசி ஞாபகப்படுத்தி அமைச்சரைத் தக்க தருணத்தில் காப்பாற்றினார்.

ஆனாலும் அமைச்சர் விடவில்லை. 

"இறந்த பகடர் இனத்துக்கு அந்த மலைச்சரிவில் உலகமே வியக்கும் வண்ணம் ஆறு கோடி ருபாய் செலவில் ஒரு நினைவுச்சின்னம் எடுத்து வரலாறு காணாத உலகப் பெருவிழா நடத்தி அதைத் தொடங்கி வைக்கப் பிரதமரையே அழைக்கப் போகிறோம். பிரதமர் வரமாட்டார் என எங்கள்.எதிரிகளிலே யாரும் மனப்பால்குடிக்க வேண்டாம். எங்களுக்காக இல்லாவிடினும் மறைந்த பகடர்களுக்காகப் பிரதமர் அவசியம் வருவார்” என விளாசித் தள்ளினார்.

நாட்டின் பத்திரிகைகள் 'பகடர்' ஹைபவர் கமிட்டி ஊழல்கள் பற்றி விரிவாக வெளியிடத் தொடங்கியிருந்தன. பகடர்கள் எங்கே எப்படி வாழ்கிறார்கள் என்று அறுபது மைல் தொலைவில் இருந்த அவர்களைப் போய்ப் பார்க்காமலே பகடர் நல அபிவிருத்திக் கமிட்டி இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் ஊதாரிப் பயணங்கள் போய் வந்தது பற்றிய சுவையான தகவல்களும், ‘என்ஸைக்ளோபீடியா' பற்றி