பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கூபே

1097

புதுமணத் தம்பதிகளுக்கும், அவர்களை வழியனுப்ப வந்திருந்தவர்களுக்கும் கூட உண்மை மறந்து போய் மந்திரி தியாகம் செய்தது போலத்தான் நினைவிருந்தது. பி.ஏ, செக்யூரிட்டி அலுவலர், இரயில்வே ஆட்கள் எல்லாருமே அமைச்சரின் சமயோசித திறமையை வியந்து பிரமித்துப் போயிருந்தார்கள்.

இரண்டு, மூன்று தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை வேளையில் மந்திரி தம் வீட்டில் ஓய்வாக இருந்த போது அவருக்குக் காப்பி ஆற்றிக் கொடுத்துக் கொண்டே அவருடைய மனைவி அவரைக் கேட்டாள் : -

“ஏங்க, இதென்ன பச்சைப் பொய்? நம்ம கலியாணம் நடந்த இலுப்ப மரத்துப்பட்டியிலே ரயிலே கிடையாதே? கலியாணம் முடிஞ்சு, அங்கிருந்து கிளம்பறப்பக் கூட நம்ம ரெண்டு பேரும் ரெட்டை மாட்டு வண்டியிலதானே உங்க கிராமமான கும்மத்தான் பூண்டிக்குப் போனோம்? என்னமோ ரயிலு, தேனிலவு அது இதுன்னு எல்லாம் பேப்பர்ல நீங்க பாட்டுக்கு அடிச்சு விட்டிருக்கீங்களே?”

“சரி சரி! உன்னை யாரும் கேட்கலே இப்போ வாயை வெச்சுக்கிட்டுச்சும்மா கிட…” என்று கடுமையாக இரைந்து அவளைக் கோபித்துக் கொண்டார் மந்திரி.

(கல்கி, தீபாவளி மலர், 1982)