பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஊமைக் காயம்

1099

நிலையான வருமானம் இல்லாத மனைவியின் சம்பாத்தியத்தில், காசு திருடிச் சாராயக் கடைக்குப் போகக் கூடிய ஒரு புருஷனுக்கு அத்தனை தூரம் அவள் நடுங்கிச் சாவதைப் பார்த்துக் கலாதேவி சிந்திக்கத் தொடங்கினாள், பரிதாபங் கூடப்பட்டாள். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி பெண்ணடிமைத்தனத்தை வளர்க்க விரும்பியவர்கள் இந்நாண்டில் உண்டாக்கியது என்று அவளுக்குத் தோன்றியது. சராசரி இந்தியப் பெண்களும் இந்தப் பழமொழிக்கு ஏற்பத்தான் நடந்து கொள்கிறார்கள் என்று எண்ணினாள் கலாதேவி,

புருஷன்,குடும்பம், குழந்தை குட்டிகள் எதுவுமே இல்லாமல் புகழும் பணமுமாக உயர்ந்து வாழும் தன்னையும் செல்லம்மாளையும் மனத்துக்குள் ஒப்பிடத் தொடங்கினாள் அவள்.

செல்லம்மாளை விடத் தான் பல மடங்கு புகழோடும், பணத்தோடும், செல்வாக்கோடும் வாழ முடிந்திருக்கிறது. அதற்குப் புருஷனோ, குடும்ப வாழ்க்கையோ தனக்கு இல்லாதது எந்த விதத்திலும் தடையாக இருக்க நேர்ந்தது இல்லை. ஒரு வேளை தான் இந்தக் கலைத் துறைக்கு வராமல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை வாழ்ந்து, கணவனுக்கு அடங்கிய மனைவியாக இருந்திருந்தால், இப்படிப் புகழ் பெற்றிருக்க முடியாது. நட்சத்திரமாக ஜொலித்திருக்க முடியாது என்பதை எல்லாம் கூட அவள் நினைத்தாள்.

தன்னையும் தன் வேலைக்காரி செல்லம்மாளையும் பெண் என்ற பொது அடிப்படையில் மனத்தராசில் நிறுத்துப் பார்த்த போது, கலாதேவிக்குத் தன் பங்குக்கு எடை கூடியிருப்பது தெரிந்தது.

இன்று வானத்து நட்சத்திரங்களை விட என் ஆற்றல் அதிகம். அந்த நட்சத்திரங்கள் இரவில் மட்டுமே ஜொலிக்க முடியும், நானோ இரவில் மட்டும் அல்லாமல், பகலிலும் ஜொலிக்க முடிந்தவள். அந்த அப்பாவிப் பத்திரிகைக்காரன் திறமையாகக் கற்பனை செய்து எழுதுவதாக எண்ணிக் கொண்டு நான் கலையையே மணந்து கொண்டு வாழ்வதாக எழுதியிருந்தான். அப்படியானால் கலை எனக்குக் கணவனா? இல்லை; கலை என்னை ஆளவில்லை; நான் கலையை ஆளுகிறேன். அப்பாவி வேலைக்காரி செல்லம்மாளைப் போலவோ, அவளை விடச் சமூகத்தின் மேல் தட்டைச் சேர்ந்த வேறு ஒரு குடும்பத் தலைவியைப் போலவோ, நான் ஒரு சாதாரணப் பெண்மணி அல்ல. பிற பெண்கள் பின்பற்ற ஆசைப்படும் லட்சிய அழகி நான்; பிற ஆண்களைக் கனவு காண வைக்கும் கவர்ச்சிக்காரி.

‘பாவம், செல்லம்மாள் கேவலம் குடும்பம் என்கிற மாட்டுத் தொழுவத்தில் தாலி என்கிற கயிற்றால் கட்டப்பட்டவள் அவள். எனக்கு இருக்கும் இந்த அளவற்ற சுதந்திரம் அவளுக்குக் கிடையாது.’

இப்படி நினைத்து விட்டு நோக்கிய போது வேலைக்காரி செல்லம்மாள் சாராயக் குடிகாரனாகிய கணவனிடம் அடிபடும் ஒரு புழு போலத் தென்பட்டாள். குடித்து விட்டு வீடு திரும்பும் கணவனிடம் கண்மண் தெரியாமல் அடிபட்டு