பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கடைசியாக ஒரு வழிகாட்டி

1109

தமிழர்களாக நடந்து கொண்டார்கள். நாயுடுவோ தமிழில்தான் பேசினார். ஆனால், செயலில் ஆங்கிலேயராக நடந்து கொண்டார்.

இன்று கடைசியாகத் தமிழ்நாட்டு உடையில், ஆங்கிலேயர்களின் தாராள மனமுள்ள ஒரு பேராசிரியரை அவள் சந்தித்து விட்டாள். தனக்குச் சுலபமாக ஒரு வழிகாட்டி - கெய்டு கிடைத்து விட்டார் என்பதை நம்புவதே கடினமாக இருந்தது அவளுக்கு.

நவநாகரிகமான உடைக்குள்ளே நுழைந்திருக்கும் அநாகரிகமான பல பத்தாம்பசலி மனிதர்களை விட, அநாகரிகமான பத்தாம்பசலி உடையில் ஒளிந்திருக்கும் நவநாகரிகமான மனிதர் ஒருவரை எதிர்பாராத வகையில் வழிகாட்டியாக அடைந்ததைத் தன் பாக்கியம் என்றே கருதினாள் சுகுணா.

(கலைமகள், தீபாவளி மலர், 1983)