பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1112

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஒரு ‘ஸிப்’ குடித்து விட்டு அவர் கேட்டார்.

“ஹரே கிருஷ்ணா மூவ்மெண்ட் ரஷ்யாவுக்குள் கூட நுழைந்து விட்டது பார்த்தீர்களா?”

மீண்டும் ஒரு சீஸ் துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அது கரைந்து முடிந்ததும், “ராணுவக் கூட்டு ஏற்பாடுகள் இரண்டாவது உலக மகா யுத்த நாளில் பயன்பட்டது போல இப்போதெல்லாம் பயன்படுவதில்லை. கூட்டு ஏற்பாடுகளே பரஸ்பரம் ஏமாற்றிக் கொள்ளத்தான் பயன்படுகின்றன” என்று மெதுவாகத் தொற்றினார் இவர். அவர் பதில் உடனே வந்தது:

“என் தந்தை இரண்டாவது உலக யுத்தத்தில் இராணுவ வீரராகப் பணியாற்றியவர். நிறையச் சொல்லியிருக்கிறார்.”

“இரண்டு பக்கத்து நாடுகளே தங்களுக்குள் நேசமாகவும், சகஜபாவத்துடனும் இருந்து விட முடியாமலும், கூடாமலும் வல்லரசுகள் இரகசியமாகத் தலையிட்டு அவற்றில் ஒரு நாட்டைத் தன் ராணுவ ஆதரவு வலையில் சிக்க வைக்கிறது. இதனால் உருவாகும் டென்ஷன் உலக சமாதானத்தையே பாதிக்கிறது.”

“ஆமாம்! உலக சமாதானம் என்பது மந்திரம் போல் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஓர் அழகிய வார்த்தை.”

ஏதடா கொஞ்சம் பிடி கொடுக்கிறானே என்ற நம்பிக்கையுடன், “மந்திரங்கள் எல்லாமே பயன் கருதி - பயனை உடனே எதிர்பார்த்தே உச்சரிக்கப்படுகின்றன.”

“இருக்கலாம். பட்.நெவர் பிலீவ்வேர்ட்டெகரேஷன். டெகரேடட்வேர்ட்ஸ் வில் ஸெர்வ் நோ பர்ப்பஸ்.”

“சமாதானம் என்பதோ - உலக சமாதானம் என்பதோ ஓர்அலங்கரிக்கப்பட்ட வார்த்தையில்லை. அழகு ஊட்டப்பட்ட சொற்றொடரும் இல்லை.”

“செயல் ரீதியாகக் காண்பிக்க வேண்டிய பலவற்றை, அலங்கரிக்கப்பட்ட சொற்றொடர்களால் பேசியே தீர்த்துக் கொண்டிருப்பது உலகில் ஒரு வழக்கமாகவே ஆகியிருக்கிறது.”

“அந்த வழக்கத்தை நாமாவது போக்க முற்பட வேண்டாமா?”

“வழக்கங்கள் இயல்பாகப் போகும், வரும். நாமாகப் போக்க முடியாது.”

இதோடு ஒரு சுற்றுப் பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. இவரால் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் களைப்பாயிருப்பதாகச் சொல்லி, தூங்கப் போய்விட்டார்.மறுநாள் காலையில் ‘ஏர் பொல்யூஷன்’ பற்றிப் பேச்சைஆரம்பித்தார் அவர். அது பல்வேறு பொல்யூஷன்கள் பற்றி வளர்ந்து கிளை பரப்பி முடிந்தது. பகலில் கடற்கரையில் ‘சன்பாத்’ எடுத்தார்கள். அப்போதும் ‘ஐஸ் பிரேக்’ ஆகவில்லை.