பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒருமைப்பாட்டைக்காக்க ஒரு மாநாடு

1137

பிரதிநிதி, தமிழக இட்லியைப் பிரமாதமாக இரசித்தார். தமிழகப் பிரதிநிதி காஷ்மீர் ‘காப்’பை விரும்பி உண்டார். உ.பி. பிரதிநிதி கன்னட பிஸி பேளிஹோளா பாத்தை ஏற்றுச் சுவைத்தார்.

மூன்று நாள் கூட்டத்துக்குப் பின்னரும் எந்த உருப்படியான யோசனையும் உருவாகவில்லை. மறுபடி அடுத்த கூட்டத்தை எங்கே கூட்டுவது என்ற பிரச்னை தான் எழுந்தது.

முடிவில் அதை ஒட்டிப் பெரிய சர்ச்சையே மூண்டது. “எந்த மாநாடானாலும் அதை வடக்கே தான் கூட்டியாக வேண்டுமா என்ன? வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ்நாடு தெற்கே இருப்பதை மறைப்பானேன்? வடக்கே தொடர்ந்து வாழ்வதா? தெற்குத் தேய்வதா?” என்றார் கணியூர் மணிமாறன்.

அடுத்த கூட்டத்தைக் கோவாவில் கூட்ட வேண்டும் என்றார் கொங்கணிப் பிரதிநிதி,

“பீகார் தான் பிற்பட்ட மாநிலம். அங்கே கூட்டுவது தான் சரி” என்றார் பீகார்

பிரதிநிதி.

இப்படி ஒவ்வொரு மாநிலத்துப் பிரதிநிதியும் அடுத்த உச்சக் கட்ட மகாநாடு, தம் மாநிலத்திலேயே கூட்டப் பட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள். மகாநாட்டுத் தலைவரால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

மகாநாட்டை முடித்த பின் அவர் முன் இரு முக்கிய பிரச்னைகள் இருந்தன. ஒன்று, மூன்று நாட்களாக சிம்லாவில் கூடி என்ன செய்தோம் என்று உள்துறை அமைச்சகத்துக்குச் சொல்வதற்கு எதுவுமே இல்லை. இரண்டாவது, அடுத்த மகாநாட்டை எங்கே கூட்டுவது என்பது பற்றிய கடுமையான சர்ச்சை,

பிரதிநிதிகளை வழியனுப்பிய பின் சுலபமாகப் பிரச்னைக்கு முடிவு ஒன்று காண வழி பிறந்தது. இந்த மூன்று நாள் உச்சகட்ட மகாநாட்டின் செலவே பிரதிநிதிகளின் TA, D.A. உள்பட ஆறு லட்ச ரூபாய்க்கு மேல் ஆகியிருந்தது. ஆறு அங்குலம் கூட ஒருமைப்பாடு வளரவில்லை. திரும்பத் திரும்ப யோசித்த போது மகாநாட்டை ஏப்ரல் முதல் தேதி கூட்டியதால் தான் இப்படி ஆகி விட்டதோ என்று கூடத் தோன்றியது. எந்த மாநிலமும், மொழி, இன, ஆணவங்களையும் பிரதேச ஈகோவையும் விட்டுக் கொடுத்து ஒற்றுமைக்கு முன் வரத் தயாராயில்லை. விரக்தியிலும், எரிச்சலிலும் கமிட்டியின் தலைவர் பின் வரும் சிபாரிசை அரசாங்கத்துக்கு எழுதி அனுப்பினார்.

“ஒருமைப்பாட்டை இப்போது இருக்கிற அளவிலாதுகாப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அதைப் பற்றி மேலும் விவாதிக்கவோ, கலந்து பேசவோ செய்யாமல் அதை அப்படியே விட்டு விடுவது நல்லது. நாம் ஒருமைப்பாட்டை வளர்க்க எடுக்கும் எந்த முயற்சியும், ‘கவுண்டர் புரடக்டிவ்’ ஆக நேர் எதிரான விளைவையே தருகிறது. ஒருமைப்பாட்டைப் பற்றிப் பல வேறு மொழி இன மக்கள் சேர்ந்து அமர்ந்து பேச ஆரம்பிக்கும் போதே வேற்றுமைகள்தான் தலை தூக்குகின்றன. ஒவ்வொரு மொழி
நா.பா. 11 - 33